
மகிஷாசுரமர்த்தன ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்
சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்யவுள்ளார்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன.
அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு. மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர்...
















