Shadow

Web Series

தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
மத்திய பூமியின் விரிவாக்கத்தையும், டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்ததையும், மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதையும், இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதியின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல சீசன் சித்திரத்தின் முதல் இரண்டு எபிசோடுகள் ப்ரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகம் முழுவதும் செப்டம்பர் 2 வெள்ளியன்று (நேர மண்டலம் சார்ந்தது) வெளியாகும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் கிடைக்கும்....
தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

OTT, Web Series, திரைத் துளி
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்தியேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹ்ரித்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் கல...
எமோஜி விமர்சனம்

எமோஜி விமர்சனம்

OTT, Web Series, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் 'எமோஜி' எனத் தலைப்பிட்டுள்ளனர். எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை. பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை. நாயகனின் நண்பனாக VJ ஆஷிக் நடித்துள்ளார். நடப்பனவற்றை எல்லாம் ராப் பாடல்களாக மாற்றும் ராப்பராக நிறைய பாடுகிறார். சனத் பரத்வாஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னண...
ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

OTT, Web Series
ஆஹா தமிழில், ஜூலை 1 அன்று வெளியாகியிருக்கும் அமானுஷ்ய இணையத்தொடர். மிகுந்த கொடுமையான பால்யத்தைக் கொண்ட லாவண்யா எனும் இளம்பெண், தன் பால்யம் ஏற்படுத்திய வடுவிலிருந்து மீள வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறுவயதில், தன் சகோதரியால் லாவணி என அழைக்கப்படுவதால், சகோதரியின் மீதுள்ள கோபத்தால் அப்பெயரை ஆன்யா என மாற்றிக் கொள்கிறார். பேயும் இல்ல பிசாசும் இல்ல என நம்ப விரும்பும் ஆன்யா, தனது இன்ஸ்டாகிராம சேனலான ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’-இல் ஒப்பனை பற்றிய காணொளி போடும் பொழுது, அவளது பின்னால் ஓர் உருவம் பதிவாகிறது. அந்த வீடியோ மிகவும் வைரலாக, ஆன்யா அதன் மூலமாகக் கிடைக்கும் பிரபல்யத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். லாவணி எனும் ஆன்யாவாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். ஆன்யாவின் மூத்த சகோதரி மதுவாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தாலும், நிவேதிதா தான் தொடரின் நாயகி. இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்...
சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

OTT, Web Series
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர். மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொ...
ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

OTT, Web Series, சினிமா, திரைத் துளி
மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதளத் தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில்...
குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

OTT, Teaser, Web Series, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காகக் குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பன்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியைக் கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்...