Shadow

படைப்புகள்

ஜொள்ளன்

ஜொள்ளன்

கதை, படைப்புகள்
மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை.'இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல' என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார்.திண்ணையை ஒட்டிய சாளரம் வழியாக உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாளரத்திற்கு முதுகைக் காட்டியது போல் கட்டில் மேல் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தார்."தூங்கிட்டியா?""இல்ல. ஏன்?""உள்ள புழுங்கல? திண்ணைக்கு வாயேன். பேசிட்டிருப்போம்.""இப்ப அது மட்டுந்தான் குறைச்சல். உங்க கூட சேர்ந்து திண்ணைய தேய்க்க ஆள் யாரும் இன்னிக்கு...
அடையாளங்கள்

அடையாளங்கள்

கதை, படைப்புகள்
'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!''எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.' 'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வ...
அந்தி நேர சாயை – 3

அந்தி நேர சாயை – 3

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 2என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டே இருந்தாங்க. உள்ளூர் வைத்தியர் மருந்துக்கு சரி படல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு கிட்னி சுத்தமா செயலிழந்துடுச்சுன்னும், இன்னொன்னு பலவீனமா இருக்குன்னு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு சொன்னாரு. உடனே தனியார் ஆஸ்பத்திரில சேர்த்தோம். பலவீனமா இருக்கிற கிட்னி கொஞ்ச நாள் தான் தாங்கும் என சொல்லிட்டாங்க. எவ்ளோ சீக்கிரம் முட...
அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 2

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 1முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும்? அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா?ஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின...
அந்தி நேர சாயை – 1

அந்தி நேர சாயை – 1

கதை, படைப்புகள்
எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா வேலைக்கு வச்சாரு. இப்ப தாத்தா இல்ல. ஆனா அந்தக் குறை எனக்கில்லாததுக்கு கப்பூரார் தான் காரணம். அப்பாவ விட பத்து பதினைஞ்சு வயசு அதிகமா இருக்கும். அவரோட பெயர் நாராயணன்னு நினைக்கிறேன். அவர் ஊர்ப் பெயரைச் சொல்லி சொல்லி.. அதே பழக்கம் ஆயிடுச்சு எங்க வீட்டுல.கப்பூராருக்கு எங்கள விட்டா யாரும் இல்ல. அவருக்கு பதினேழு பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. ...
உயிரோடு இருங்கள்

உயிரோடு இருங்கள்

கவிதை, படைப்புகள்
என்னது? ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா?இட ஒதுக்கீடு கேட்டு நடைப் பயணமா?சேற்றில் மிதக்கும் இந்த சேரிக்குள் நடப்பதா? என்னால் முடியாது!உங்கள் வயிறு எரிந்தால் போதாதா? தெருவிளக்கும் எரியணுமா?தண்ணீர் இல்லை என்கிறீர்கள் அப்படி என்றால் கண்ணீர் ஏது?இலஞ்சம் வாங்கினேன் என்கிறீர்கள் நீரூபிக்க முடிந்ததா?என்ன வயதாகிவிட்டது என்னைப் போய் உண்மை பேசச் சொல்கீறீர்கள்தூரமாய் நில்லுங்கள் தொட்டுத் தொட்டு 'காரை' அழுக்காக்கி விட்டீர்கள்!நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை அழுதாலும் பரவாயில்லை உயிரோடு இருங்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டும்!- தமிழ் ப்ரியா...
மாயப் புன்னகை

மாயப் புன்னகை

கதை, படைப்புகள்
தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக அபிமன்யுவின் முகம் தோன்றிக் குற்றயுணர்ச்சியைக் கிளறியது.யுதிஷ்ட்ரனுக்கு தர்மன் என்ற பெயர் பொருத்தமானது தானா என்று யோசித்தான் கர்ணன். வஞ்சகமாக அன்றோ துரோனரை வீழ்த்தி உள்ளனர்? தர்மரின் அம்பு கர்ணனின் வில் நாணை அறுத்தது. வேகமாக நாணைக் கட்டிய கர்ணனால் அதே வேகத்தில் அம்பினைச் செலுத்த முடியவில்லை. நான் உனது தமையன் என்று கூறினால் தர்மன் ஒருவேளை ...
கி.பி.5

கி.பி.5

கதை, படைப்புகள்
கி.பி.4 கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை...
கி.பி.4

கி.பி.4

கதை, படைப்புகள்
கி.பி.3 வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். க...
கி.பி.3

கி.பி.3

கதை, படைப்புகள்
கி.பி.2 மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்தப் புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டுப் பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்குப் பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்துக் கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினைப் பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண...
கி.பி.2

கி.பி.2

கதை, படைப்புகள்
கி.பி.1 எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களைப் படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டுப் பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்றுக் கொண்டு தலையைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி...
கி.பி. 1

கி.பி. 1

கதை, படைப்புகள்
~~கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.~~ இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகியப் பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரைப் பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலிய...
இருட்டில் கட்டிய தாலி

இருட்டில் கட்டிய தாலி

கதை, படைப்புகள்
அம்மன் கோவில் மணியடிக்கும்  போது இரவு நேரம் மணி பனிரெண்டை தாண்டி இருக்கும்.  மணி விடாமல் அடித்தது.  யாரோ கயிற்றை பிடித்து தொங்குவது போல் விடாமல் மணியோசை கேட்கவும் ஊரே எழுந்துவிட்டது.  பொதுவாக இப்படி கிராமத்தில் எங்கோ தீப்பிடித்து விட்டாலும், யார் வீட்டிலாவது திருடன் புகுந்து மாட்டிக் கொண்டாலோ ஊராரை கூப்பிட மணியடிப்பது வழக்கம்.இன்றும் அப்படி தான் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று ராகவன் எழுந்தான்.  பாதி தூக்கத்தில் இருந்த மனைவி தூக்கம் கலையாமலேயே ஏங்க எழுந்து போவாதிங்க, பேசாம படுங்க எதுனாலும் காலையில் பேசிக்கலாம் என்று முணு முணுத்தாள் நீ சும்மா கிட போயி என்னன்னு பார்த்தா தான் உறக்கம் வரும் என்று எழுந்த ராகவன் கையில் டார்ச் லைட்டை எடுத்து கொண்டு தெரு கதவை திறந்து சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.தெரு முனையில் இருந்து பார்க்கும் போதே அம்மன் கோவில் வெளிச்சத்தில் நிறைய பேர் கூ...