
இந்தநாள் நல்லநாள்
குறுக்கே போனது பூனை
எதிரே வந்தால் விதவை
புறப்பட்டது ராகுகாலம்
எமகண்டம் வருவதற்குள்
சீக்கிரம் போய்சேரவேண்டும்
கீழ்நோக்கு நாள்
போகின்ற காரியம்
இன்று உருபட்டமாதிரிதான்மாலை திரும்பிவந்தார்
சாலையில் அந்த பூனை
விபத்தில் நசுங்கிக் கிடந்தது
விதவை அவள் வீட்டினெதிரே
அழுதுகொண்டிருந்தாள்
திருடப்பட்ட தன் சேமிப்பினையெண்ணியார் ராசிகெட்டவர்!
யார் தரித்திரம் பிடித்தவர்?- சே.ராஜப்ரியன்...