Shadow

Tag: ஓவியா

பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியு...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன் பணத்தைப் பறிகொடுக்கிறான். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்காவது என உணர்ந்து, மண்ணுளி பாம்பு, நவரத்தினக் கல், சஞ்சீவி வேர் என சதுரங்கவேட்டையில் ஈடுபடுகிறான். அவன் நேர்மையாகத் தொழிலில் ஈடுபட்டானா அல்லது சதுரங்க வேட்டையில் வேட்டையாடப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை. 'சீனி' என்ற தலைப்பில்தான் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியான ஓவியாவிற்கு, 'பிக் பாஸ்' சீசன் 1-இல் கிடைத்த எதிர்பாராத புகழின் காரணமாக ஓவியா எனத் தலைப்பு மாற்றப்பட்டது. அதாவது, 'ஓவியாவ விட்டா யாரு' என்று. பல நாள் கிடப்பில் இருந்து, மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெளியாகியுள்ள படம். KCR பிக்சர்ஸ் சார்பாக மதுரை செல்வம் தயாரித்துள்ளார். திவ்யா எனும் பாத்திரத்தில், தந்தி டிவி நிருபராக நடித்துள்ளார் ஓவியா. க்ளைமேக்ஸில், ஆபத்தில் சிக்கும் நாயகனை மீட்பதும் இவரே...
காஞ்சனா – 3 விமர்சனம்

காஞ்சனா – 3 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்!! இந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் படமான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள். பேய...
90 ML விமர்சனம்

90 ML விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ 'பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது' என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண்க...
90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி

90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி

சினிமா
நம்ம கூடவே ஒரு ஃப்ரெண்ட் இருப்பான். நாம உருப்படக்கூடாதுன்னே கடவுள் அவனை ஃப்ரெண்டா படைச்சிருப்பாரு. அந்த ஏழரை நாட்டு சனி நாம எங்க போனாலும் விடாது. அது போலத்தான் ஒரு அப்பார்ட்மென்ட்ல நல்ல வாழ்ந்துக்கிட்டு இருந்த ரெண்டு குடும்பப் பெண்கள், ஒரு வேலைக்குப் போற பேச்சிலர் பொண்ணு. இந்த மூணு பேரும் நிம்மதியா குடும்பம், குழந்தைன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. உடனே சனி பகவான் கடுப்பாகி நல்ல இருந்த மூணு பேரையும் நாசமாக்க ரீட்டான்னு (ஓவியா) ஒரு ஏழரை நாட்டு சனிய அனுப்பி வைக்கிறார். அந்தப் பொண்ணு அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும்போதே, "புகைப்பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது" என்ற ஸ்லைட் ப்ரொடக்சன் யூனிட்ல செஞ்சு வச்சது வேஸ்ட் ஆகிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தம் அடிச்சிக்கிட்டே அப்பார்ட்மெண்ட்டுக்கு வருது. அதுக்கப்புறம் வீட்டு சாவி இல்லையா என்ன எழவோ. எல்லாப் பொருட்களையும் அப்பார்ட்மெண்ட் வாசலையே போட்...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைத...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...