காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி
பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த அக்குழந்தைக்கு, நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கியது. குழந்தையின் ஆறாவது மாதத்தில், முதுகுத்தண்டில் காசநோய் பாதித்தது.
அக்குழந்தையை வங்காளதேசத்தில் இருந்து, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குநரும், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரும், அவரத...