Shadow

Tag: கிருஷ்ணன் நம்பி

காஃப்காவினால் அல்ல!

காஃப்காவினால் அல்ல!

புத்தகம்
ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள். இவர் எழுதிய 'The Metamorphosis's (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை. காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் 'தங்க ஒரு....' எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்" எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து 'லில்லிபுட்' என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சி...
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

கதை, படைப்புகள்
அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே. நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்… தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும்...
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

கதை, புத்தகம்
“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன. இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண...
இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

புத்தகம்
ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார். மதிப்பீடு செய்த சில எழுத்தாளர்களும் நம்பியைச் சரியாக மதிப்பீடு செய்தார்கள் எனச் சொல்லமுடியாது. அந்த எழுத்தாளர்கள் வரிசையில் வண்ணநிலவன், அசோகமித்திரன் போன்றவர்களைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, நம்பியின் மிக அணுக்க நண்பராக இருந்தும் கூட, நம்பியின் சிறுகதைகள் பற்றிய அவரது விமர்சனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கிறது. இந்த மூவரில், அசோகமித்திரன...
கண்ணன் தந்த கவிஞர்

கண்ணன் தந்த கவிஞர்

கட்டுரை, சமூகம்
குழந்தைக் கவிஞர் என்றதுமே நம் அனைவருக்கும் அழ.வள்ளியப்பாவின் நினைவு உடனே வந்துவிடுகிறது. அது சரிதான். குழந்தைகளுக்காக வள்ளியப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 'மலரும் உள்ளம்' என்கிற தலைப்பில் இவரெழுதிய புத்தகமொன்று ஒன்பது பதிப்புகளுக்கு மேல் அச்சாகி, முப்பதாயிரம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. எனவே இவருக்குக் கிடைத்திருக்கும் குழந்தைக் கவிஞர் பட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா தான் என்கிற பிம்பம், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகிவிட்டது என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆனால் எண்ணிக்கையில் இவரளவு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறந்த சிறுவர் பாடல்கள் எழுதிய கவிஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அழ.வள்ளியப்பாவிற்கு முன்பாகக் குழந்தைக் கவிஞர்கள் இருந்திருக்கவில்லையா என எண்ணிப் பா...
கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கட்டுரை, புத்தகம்
கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை. வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) வசித்து வந்த அழகியபாண்டிபுரம் எனும் கிராமத்திலிருந்து ஒரு நபர் வந்து எங்கள் பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பாவை உடனேயே அழைத்து வரவேண்டும் என்கிற என் சித்தப்பாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார். அப்பா பதறியடித்துக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அதோடு இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. தவறவிட்டால் மறுநாள்த...
ஒரு கதையின் கதை

ஒரு கதையின் கதை

கட்டுரை, புத்தகம்
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை. (ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்) அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...