Shadow

Tag: சார்லி

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாப்பட்டி என்கின்ற கிராமத்தில் இன்றளவும் இருந்து வரும் சாதியக் கொடுமைகளைப் பற்றி ஆவணப்படுத்தும் திரைப்படம் தான் அரிமாப்பட்டி சக்திவேல்.கதை என்று பார்த்தால் பழகி சலித்தக் கதை தான். கீழ் சாதி என்று சொல்லப்படுப்படும் வகுப்பை சேர்ந்த நாயகன், மேல் சாதி என்று சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நாயகி. இருவருக்குமான காதல், சாதிய பாகுபாட்டால் அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பு, தனிப்பட்ட முறையில் நாயகனுக்கு முதலில் இயக்குநராக வேண்டும், பின்பு தான் திருமணம் என்கின்ற லட்சியம், இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து காதல் கைகூடியதா..? இல்லையா..? என்பதே அரிமாப்பட்டி சக்திவேலின் மொத்தக் கதை.கதையாகவும் திரைக்கதையாகவும் பார்த்தால் எந்த வித புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை. குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளாவது ஈர்ப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை.சமூகத்தில் நில...
உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம்.பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம்.இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திரத்...
ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம்

ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம்

சினிமா, திரைத் துளி
அரபி ப்ரொடக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  வியன் வென்ட்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் நவம்பர் 28, 2022 ஆம் தேதி துவங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத் தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான த்ரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படதில் முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திர...
மெய் விமர்சனம்

மெய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெய் - உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம். அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது. தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள்ள...
கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிற...
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் என்...
காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...
பாம்புசட்டை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோமசு...