
சுயம்வரம் – 5
உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,"மச்சி.. நீ செலக்ட் ஆயிட்ட." என்றான்"நீ?""என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.""எப்படி சொல்ற?""ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க.""நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை."டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?""டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல...