Shadow

Tag: ஜஸ்டின் பிரபாகரன்

அடியே விமர்சனம்

அடியே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை. கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அத...
”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஜி.வி பிரகாஷ்குமார், கெளரி கிஷன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் “அடியே”.  இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்டு 25ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.  இப்படத்தில் மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபு, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். திட்டம் இரண்டு திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கிறார்.  கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டிஸ் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.பேரலல் யுனிவர்ஸ் மற்றும் அல்டர்நேட் ரியாலிட்டி கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந...
மான்ஸ்டர் விமர்சனம்

மான்ஸ்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் அல்லாமல், பெரியவர்களும் ரசித்து மகிழும்படியான படமாகவும் உள்ளது. அஞ்சனம் அழகியபிள்ளை, பெண் பார்ப்பதற்காக மேகலா வீட்டிற்குச் செல்கிறார். மேகலாவாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கதைக்கு உதவாத கதாபாத்திரம் எனினும் நிறைவாகத் தோன்றியுள்ளார் படத்தில். எஸ்.ஜே.சூர்யாவும், எலியும் தான் பிரதான பாத்திரங்கள் என்ற...
இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

சினிமா, திரைத் துளி
தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார். "நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம். தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2" , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எ...
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல். “படத்தில் ஒப்பந...
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் - கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக பாவனைகள் அலாதியாக உள்ளது. படமும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. எதிர் வீட்டுப் பெண்ணான மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைஷாலியிடம் அவர் வழிவதெல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. காதலிக்கப்பட மட்டுமே என்றாலும், வைஷாலி அதிகமாக ஈர்க்கிறார். அத்தகைய ஈர்ப்புக்கு, அவர் லூசுப் பெண்ணாகச் சித்தரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அதை விடக் குறிப்பாக, எவ்விதப...