Shadow

Tag: தான்யா

மாயோன் விமர்சனம்

மாயோன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர் உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம். - நகரப்படலம், பாலகாண்டம், கம்ப ராமாயணம் மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. அவர், முல்லை நிலக்கடவுள் என பண்டைய தமிழர்களால் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மாயோன் மலையிலுள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோயிலின் தொன்மத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பாவைக் கூத்தாகவும், அனிமேஷன் உதவியாலும், அக்கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் நம்பிக்கையையும் அழகாகக் கதையின் களமாக அமைத்துள்ளனர். இவையே தனிக்கதையாக ரசிக்கத்தக்கும் அளவு, இளையாராஜாவின் இசையோடு கை கோர்த்து ஓர் அடர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. தொன்மத்திலுள்ள அழகியல், மையக் கதையான ரகசிய அறை பொக்கிஷம், களவாட நினைக்கும் இத்தாலிய வில்லன் என்பதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கிவிடுகிறது. தொன்மத்தைத் திரையில் கடத்த த...
மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

சினிமா, திரைச் செய்தி
டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் (Double Meaning Production) சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்” ஆகும். புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பரவலான கவனத்தை ஈர்த்தது. ராமாபுரம் SRM கல்லூரியில், படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை வைக்கப்பட்டு ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம் பாரம்பரிய ...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோல...
பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம். கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே! கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம்...
“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், சிவாஜி தன் தளபதி ஜெமினியைப் பார்த்துச் சொல்லும் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வெற்றியை நோக்கிப் போகும் பொழுது, கூட இருந்து உற்சாகம் தரச் சொல்லப்படுவது "பலே". இப்படத்தின் நாயகனது செயல், அப்படி பலே சொல்லிப் பாராட்டும்படி (!?) இருக்கும் என்பதை வலியுறுத்தும் காரணப் பெயராகத் தலைப்பை வைத்துள்ளனர். வயலூருக்கு ட்ரான்ஸ்ஃபராகி வருகிறார்கள் ஃபோஸ்ட் மாஸ்டர் ரோகினியும் அவர் மகன் சசிகுமாரும். அவருக்கு தான்யா மீது கண்டதும் காதல் மலர்வதோடு உள்ளூர் கேபிள்காரருடன் தகராறாகி விடுகிறது. காதலும் தகராறும் என்னானது என்பதே படத்தின் கதை. தணக்கனாக சங்கிலி முருகன் நடித்துள்ளார். கோவை சரளாவை நடிக்க விட்டு விட்டு, அசால்ட்டாக ஸ்கோர் செய்குறார். மிக வலுவான கேரக்டர் ரோல்களை இயக்குநர்கள் அவருக்குத் தரலாம். 'செல்ஃபி' காத்தாயியாக கோவை சரளா. படம் இவரை நம்பித்தான் எடு...
பலே சசிகுமார்

பலே சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா. “இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்ட...