Shadow

Tag: தியாகராஜன் குமாரராஜா

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்ற...
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா
என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, இப்பொழுது புறவயமான அம்சமாகவே பெரும்பாலும் மாறிவிட்டது. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ படம். போகியுடன் ‘சிச்சுவேஷன்ஷிப் (Situationship)’-இல் இருக்கும் சாம் எனும் பெண், கே எனும் ஆணுடன் சிச்சுவேஷன்ஷிப்பில் இணைகிறார். பார்க்கும் கணத்தில், கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாம...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சினிமா, திரை விமர்சனம்
தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். குணவார்ப்பு: வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி - நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, பார்ன் (Porn) படங்களில் நடித்து லீலைகள் புரிந்தவர். வாழ்விடம்: வேம்பு - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். லிஃப்ட் வசதி உள்ள குடியிருப்பில் வசிப்பவர். ஷில்பா - சமூகத்தை விட்டு ஓடிப்போனவர். ஜோதி - பாரம்பரியமான வீட்டில். லீலா - குடிசை மாற்றுக் குடியிருப்பில். இனி தான் சூப்பர் டீலக்ஸின் விள...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சினிமா, திரை விமர்சனம்
எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: 'மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் குழம்பி, உள்ளம் உந்த மும்பை ஓடி, பெண்ணாக மாறி, பிழைப்பிற்காக அந்தப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்து, தான் செய்த செயலோட தீவிரத்தை உணரும் தருணத்தில் பாவமன்னிப்பு வேண்டி, தன் வீடடைந்து, கடைசியில் தான் மட்டும் தான் புறக்கனிக்கப்பட்டவன் அப்படிங்கற சுயபச்சாதாபத்தை விட்டு வெளிய வந்து தன் மன...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கதை சொல்லட்டுமா? திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும். 'தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலை அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினைப் பரதேசி படத்தில் அமைத்திருப்பார் இயக்குநர் பாலா. பி.எச்.டேனியல் எனும் மனிதர் வாழ்நாளெல்லாம், தொழிலார்களுக்காகப் போராடி, அவர்களுக்கு உரிமையையும் அடிப்படை வசதியும் மீட்டதோடு, ...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சினிமா
சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு முழுப்படத்திற்குமே இது சாத்தியமாக, சினிமா மீது விவரிக்க இயலாக் காதலும், வேலையில் அதீத அர்ப்பணிப்பும் தேவைப்படும். பொதுவாக, கிடைத்த லொக்கேஷனில், லைட் உள்ளவரை படப்பிடிப்பு, பட்ஜெட்டுக்கேத்த இசை என்ற சமரசங்களில் தான் சினிமா உலகம் இயங்கிக் கொண்டுள்ள...
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்...