Shadow

Tag: பாலசரவணன்

லப்பர் பந்து விமர்சனம்

லப்பர் பந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. "கெத்து" என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து - அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடு...
“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி

“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி

சினிமா, திரைச் செய்தி
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இயக்குநர் B.ராமச்சந்திரன், “பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காகத்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்குப் போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான...
பேச்சி விமர்சனம்

பேச்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் இருந்து விலகி, ஒரு சீரியஸான அமானுஷ்ய படத்திற்கு உத்திரவாதம் அளிக்க முயன்று உள்ளது. பேச்சி என்ற சூனியக்காரியை, ஓர் அச்சுறுத்தும் பொம்மையில் ஆவாஹனம் செய்து, அப்பொம்மையை மரத்தில் ஆணியாலடித்து விடுகின்றனர். கொல்லி மலையின் ...
புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

சினிமா, திரைத் துளி
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளைத் தந்த தமிழ்த் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திட்ட இந்தத் தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடகத் துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனித...
மதுரவீரன் விமர்சனம்

மதுரவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். 'பூ' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு வஞ்சனை செய்யாமல் நிறைவானதொரு அனுபவத்தைத் தருகிறார். 2017இன் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் கதைக்குக் கச்சிதமாய் முடிச்சுப் போட்டுவிடுகிறார். ஜல்லிக்கட்டில் சாதி எப்படிக் குறிக்கிடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள...
ஏமாலி விமர்சனம்

ஏமாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை - கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். 'கஸ்கா முஸ்கா' என்று ஜெயமோகன் தனது வசனங்களா...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜி...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக்...
உன்னோடு கா விமர்சனம்

உன்னோடு கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து தலைமுறைக்கு முன், இரண்டு குடும்பங்களுக்குள் மூண்ட பகை, சிவலிங்கபுரம் எனும் ஊரையே வடக்கு, தெற்கு என இரண்டு ஊராகப் பிளவுபடுத்தி விடுகிறது. சிவலிங்கபுரம் மீண்டும் எப்படி ஒன்றிணைகிறது என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களே! இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுகள் கச்சிதமாகக் கதையோடு பொருந்துவதோடு நகைச்சுவௌக்கும் உத்திரவாதமளிக்கிறது. தன் கதையை, இயக்குநர் ஆர்.கே.-விடம் தந்து படத்தைத் தயாரித்துமுள்ளார் அபிராமி ராமனாதன். ஆர்.கே.வின் திரைக்கதையும் வசனங்களும் நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. தேசத்தின் அடையாளமாகவும், சிலை கடத்தல்காரர் காசியாக வரும் மன்சூர் அலிகானும், ஆள் கடத்தல்காரர் 'யோகா மாஸ்டர் மார்த்தாண்ட'மாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அதற்கு உதாரணங்கள். தங்களது மகனும் மகளும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என அறிந்ததும் அதைக் கொண்டாடுகின்றனர் ஐந்து தலைமுறை பகையாளி...
உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

சினிமா, திரைத் துளி
நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். தற்போது, ‘உன்னோடு கா’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். R.K. இயக்கி, C.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி மெகா மால் இணைந்து தயாரித்துள்ளனர். "அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது என்பது நான் செய்த பாக்கியம். இயக்குநர் ஆர்.கே. புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப்படியே படப்பிடிப்பை முடித்து இருப்பதே இதற்கு சான்று. இசையமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்திருக்கிறார். வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்க...
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது. படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்ற...