கூழாங்கல் விமர்சனம்
வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர்.
பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் திரியும் கணபதிக்குப் புதுசு. தந்தையை, நடக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு துண்டு கண்ணாடியைக் கொண்டு தந்தையின் முதுகையும் சூரியக்கதிர்களால் சூடேற்றியும் விளையாடுகிறான். வத்திப்பெட்டியை ஒளித்து வைத்து பீடி பிடிக்க நினைக்கும் தந்தையைக் கோபப்படுத்துகிறான். முழுப் படமுமே அவ்விருவரின் நடைப்பயணம் மட்...