Shadow

Tag: பா.விஜய்

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். ...
ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்தி...
ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.விஜய் பேசுகையில், "இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன" என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலக...
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் ...
சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசுகையில், "இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனத் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்து கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள். இதற்காகத் திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.வி...
நையப்புடை விமர்சனம்

நையப்புடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. 'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி. நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சா...