Shadow

Tag: மணிரத்னம்

மணிரத்னம் வெளியிட்ட “பரம்பொருள்” டிரைலர்

மணிரத்னம் வெளியிட்ட “பரம்பொருள்” டிரைலர்

சினிமா, திரைச் செய்தி
சரத்குமார் – அமிதாஷ் நடிப்பில் சி.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்  “பரம்பொருள்”. இப்படம் செப்டம்பர் 01ந் தேதி முதல் திரையரங்கில் வெளியாகிறது. மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.  சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூ...
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத...
சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

சினிமா, திரைத் துளி
'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்தியேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்த...
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களை...
ஒ காதல் கண்மணி விமர்சனம்

ஒ காதல் கண்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின் கூட்டணி எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பில் எண்ணெயும் ஊற்றியது படத்தின் ட்ரைலர். கல்யாணத்தில் விருப்பமில்லாமல் வாழும் காதலர்கள் ஆதியும் தாராவும். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இளமை, காதல், மகிழ்ச்சி, காமம் என முழப் படமுமே கொண்டாட்டமாக உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை படம் நெடுக்கக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ரஹ்மானின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு பி.சி.ஸ்ரீராமின் ஃப்ரேம்களையும் பாடல் காட்சிகளில் துள்ள வைத்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். இந்தத் திறமையாளர்களின் சங்கமம் செய்துள்ள மேஜிக், திரையில் விஷூவல் விருந்தாக ரசிகர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது. எந்த அடுக்குகளும் சிக்கிலுமில்லாத கதையை எடுத்து தனக்கே உரித்தான அழகியலோடு எளிமையாக திரைக்கதை அமைத்துள்ளார...
கடல் விமர்சனம்

கடல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான இணைகளின் வாரிசுகள் அறிமுகமாகும் படம்;  அதே போல் சுமார் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கிறார். ஆர்ப்பரித்திருக்க வேண்டிய கடல், அலைகள் ஓய்ந்த இராமேஸ்வரம் கடற்கரை போல் அமைதியாக உள்ளது.  அதை தான் "ஆழ்ந்த தத்துவமும், ஆன்மீகமும் கொண்ட ஸ்க்ரிப்ட்" என இப்படத்திற்கு கதை - வசனம் எழுதிய ஜெயமோகன் படத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார் போலும்.  தேவனை கோபித்துக் கொள்ளும் சாத்தான், தேவனை பழி வாங்க நினைப்பது தான் படத்தின் கதை.சாத்தான் தான் இந்தப் படத்தின் நாயகன். பெர்க்மன் என்னும் சாத்தானாக அர்ஜூன். அதுவும் பைபிளை கரைத்துக் குடித்த புத்திசாலி சாத்தான். விளையாட்டு, குதூகலம், கேலி, கிண்டல், மகிழ்ச்சி என வாழ்வைக் கொண்டாடும் சாத்தான். மன்னிக்க விரும்பாத தேவன் ஒருவனால் சாத்தான் காட்டிக்...