Shadow

Tag: மதன் கார்க்கி

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இ.வி.கணேஷ்பாபு சார் மிகவும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பழக்கம். வீட்டில் நடக்கும் விழா அனைத்திற்கும் வருவார், இந்த விழாவையே வீட்டில் நடக்கும் ஒரு விழா போன்றே நடத்துகிறார். கட்டில் என்பதை ஒரு உருவகமாகத் தலைமுறை கடந்த ஒரு அடையாளமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. ‘கோயில...
சீதா ராமம் விமர்சனம்

சீதா ராமம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் - சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் தொடங்குகிறது. கூடவே, ராம் தன் காதலிக்கு எழுதிய கடிதம் எப்படி பாகிஸ்தானின் பிரிகேடியருக்குக் கிடைத்தது என்ற சஸ்பென்ஸைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னை அசால்ட்டாகப் பொருத்திக் கொள்ளும் மராத்தி நடிகரான சச்சின் கடேகர், பிரிகேடியர் தாரிக் பாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வடிவம...
சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் –  உண்மையெது பொய்யெது?

சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் – உண்மையெது பொய்யெது?

சினிமா, திரைச் செய்தி
சாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப் பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதன் கார்க்கி, “பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், புது வரிகளுக்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் சுஜீத் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் 'மழையும் தீயும்' என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகக் கதாநாயகனைத் தீயாகவும், கதாநாயகியைத் தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்...
காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

சினிமா, திரைத் துளி
DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017இல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரைச் சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதி...
மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

சினிமா, திரைத் துளி
மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான 'காயம்குளம் கொச்சூன்னி' படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. படத்தைச் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, "இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம். இது மிகவும...