இமெயில் விமர்சனம்
நாயகி “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது. அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த விளையாட்டு விபரீதமாகி நாயகியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதே “இமெயில்” திரைப்படம்.கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தோன்றக் கூடிய நல்ல லைன் தான். ஆனால் அந்த லைனை, கதையாக மாற்றி, அதற்கு திரைக்கதை எழுதிய விதத்தில் தான் படக்குழுவினர் கோட்டை விட்டிருக்கின்றனர்.ஆரம்பத்தில் வரும் காதல் எபிசோடுகளும், மனோபாலா வரும் எபிசோடுகளும் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கின்றன. ஹீரோயின் விபரீதமான அந்த விளையாட்டை விளையாடத்...