Shadow

Tag: யுவராஜ்

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது - சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். 'எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்' என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார். படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இந்...
டெடி: ஆர்யா – சாயிஷா

டெடி: ஆர்யா – சாயிஷா

சினிமா, திரைத் துளி
ஆர்யா, சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் 'டெடி'. நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'டெடி' படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதிய வகை ஆக்ஷன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர். இந்த 'டெடி' படமும் அவரது டெடிகேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது. இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் பணிபுரிந்த யுவா. இசை அமைப்பாளராக டி. ...
சிறகு – இசையோடு ஒரு பயணம்

சிறகு – இசையோடு ஒரு பயணம்

சினிமா, திரைத் துளி
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'. மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் மூலம் நன்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். மருத்துவர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் . காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜா பட்டாச்சார்ஜி .'பியார் பிரேமா காதல்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்...
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது. அரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந்த...
மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

சினிமா, திரைச் செய்தி
“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சு செஞ்சிருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது; ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில். இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு. சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் என் கேரக்டரான ஒத்த வெடி அப்படி" என்றார் ஆர்.ஜே விக்னேஷ் காந்த். "மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா ச...
மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், "ஏன் சமைய...
உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது. படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந்த...
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

சினிமா, திரைச் செய்தி
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந்த...
ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

சினிமா, திரைத் துளி
நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான "பாட்னர்" என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யு டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் 'மகா' நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜா...
கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

சினிமா, திரைத் துளி
ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகள் மட்டுமன்று. உணர்வுபூர்வமான சில தருணங்களும் கூட! தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து ‘96 படத்தைத் தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே இந்த விருதை மிகவும் உணர்வுபூர்வமான விசயமாகக் கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது. அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாகக் காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்தப் ...
ஜூலை காற்றில் விமர்சனம்

ஜூலை காற்றில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னாலே உன்னாலே" படத்தில், 'ஜூன் போனா ஜூலை காற்றில்' என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு 'ஜூலை காற்றில்' எனத் தலைப்பிட்டுள்ளார். ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம். கடைசி அத்தியாயமான 'Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் மன...
உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

சினிமா, திரைத் துளி
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 எடுப்பதற்கான காரணம் என்ன?" என்பதற்கு அழகான ஆழமான பதிலைச் சொல்லி இருக்கிறார். "இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம்" என்கிறார். மேலும், "எனக்குக் கம்யூனிசச் சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற ...
ஐபிசி 376

ஐபிசி 376

சினிமா, திரைத் துளி
ஐபிசி 376 - ஒரு த்ரில்லர் படம். வன்புணர்விற்கான தண்டனையைப் பற்றிக் குறிக்கும் சட்டப்பிரிவு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், நகைச்சுவை எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார். படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. பெண்களை இழிவுப்படுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இ...
“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்

சினிமா, திரைச் செய்தி
ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பேசுகையில், “எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர்.ஆர்.சந்திரன். சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பத...
ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

சினிமா, திரைச் செய்தி
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுக்களை யூடியூப் சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் திரைப்படத்துறைக்க...