Shadow

Tag: ரமா

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை. கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நா...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம...
ஜீவி விமர்சனம்

ஜீவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஜீவி என்றால் ஜீவிப்பவர், அதாவது உயிர்வாழ்பவர் அல்லது பிழைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். படத்தின் தலைப்பை, அறிவால்  ஜீீவிப்பவர் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சரவண லெனின், தனது வீட்டு ஓனரான லக்ஷ்மி வீட்டில் திருடுகிறான். அப்பொழுது அவன் வீட்டில் தொடர் அசாம்பாவிதங்கள் நிகழ்கிறது. அதே போன்ற நிகழ்வுகள், லக்ஷ்மிக்கும் அவரது இள வயதில் நடந்துள்ளதை அறிகிறான். ஆக, லக்ஷ்மி குடும்பத்தில் நிகழ்வது அனைத்தும் தன் வீட்டிலும், பிரதி எடுத்தது போல் நடக்கும் என சரவண லெனின் நம்புகிறான். அதாவது இரண்டு குடும்பத்தில், வெவ்வேறு சமயங்களில் நடக்கும் நிகழ்வு ஒரே போலே இருக்கிறது. லக்ஷ்மி வீட்டில் நடக்கும் கெட்டவை போல் தன் வீட்டிலும் நிகழாமல் இருக்க நாயகன் எடுக்கும் முயற்சியே படத்தின் கதை. சரவண லெனின் என்பது நாயகன் வெற்றி ஏற்றிருக...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ...