Shadow

Tag: வசந்தி ராஜசேகரன்

நாரத்தை சாதம்

நாரத்தை சாதம்

சமையல்
வணக்கம் தோழிகளே,நாரத்தை ஊறுகாய் தானே சாப்பிட்டிருக்கோம், சாதம் கூடவா? ஆமாங்க. நார்த்தை சாப்பிட்டா, இந்த வயிறு பொருமல், அஜீரணம், சூடு எல்லாம் பறந்து போயிரும். எங்க வீட்ல நார்த்தை சாதம் அப்படினாலே, கூடவே சட்னி வேணும்னு வேண்டுகோளும் வந்திரும். தேவையான பொருட்கள்:நார்த்தைப் பழம்- 1வெங்காயம்தக்காளிபூண்டுமஞ்சள் தூள்- 1 தேக்கரண்டிகறிவேப்பிலை - கைப்படிஉப்பு- தேவைக்குசெய்முறை:Step 1:பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போடவும்.Step 2:கடுகு பொரிந்ததும்; வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். Step 3:நார்த்தைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அந்தச் சாற்றை, இப்பொழுது ஊற்றி, மஞ்சள் தூள் போட்டுக் கலக்கி விட்டுக் கொதிக்க விடவும். Step 4:எண்ணெய் பிரிந்து வரும் சமயம், நன்கு ம...
மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)

மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)

சமையல்
வணக்கம் தோழிகளே,மீன் குழம்புன்னு பார்த்தா, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பக்குவம் இருக்கு. இன்னிக்கு, நாம கொங்கு நாட்டு புளி மீன் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.                            தேவையான பொருட்கள்:மீன் – 1 கிலோசின்ன வெங்காயம் – ¼ கிலோபூண்டு – 5 பல்கறி மசாலா தூள் – 1 கரண்டிவெந்தயம் – 1 டீ ஸ்பூன்தக்காளி- 1புளி- 1 முழு எலுமிச்சை பழம் அளவுகறிவேப்பிலை- கைப்பிடிஉப்பு- தேவைக்குStep 1:முதலில், சின்ன வெங்காயத்தையும், கறிமசாலா தூளையும் அப்படியே பச்சையா அரைச்சு எடுத்து வச்சுக்கோங்க. Step 2: பாத்திரத்தில், எண்ணெய் ஊத்தி, கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் போட்டுச் சிவந்ததும், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். Step 3: இப்போ, அரைச்ச விழுது, புளி...
மீன் ரோஸ்ட்

மீன் ரோஸ்ட்

சமையல்
வணக்கம் தோழிகளே,“மீன் ரோஸ்ட்”, நல்லா மொறுமொறுன்னு சுவையான ரோஸ்ட்,  அதுவும் இந்த மழைக் காலத்தில், புரட்டாசி வேற முடிஞ்சிருச்சு, சொல்லவே வேனாம் போங்க. அடடே,,, கேட்டாலே நிறைய பேருக்கு! சரி சுவை மட்டும்தானா?  மீன்ல பார்த்தா ஒமேகா 3 அமிலங்கள் அதிகமா இருக்குது. இது உடம்பு தன்னால உருவாக்க முடியாத மிக முக்கியமான அமிலம். அதனால மீன் ரொம்ப சத்தானதுங்க. சரி இன்னைக்கு, சுவையான மீன் ரோஸ்ட் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்:மீன் – 1 கிலோ பூண்டு – 8 பல் மிளகாய் தூள் – 2 குழி கரண்டி மிளகு – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10-15 மைதா – 1 கரண்டி உப்பு, எண்ணெய் - தேவைக்கு Step 1:மைதா, எண்ணெய், மீன் தவிர, மீதி எல்லாப் பொருளையும் மிக்சியில் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. நல்லா அரைச்ச பிறகு, மைதா போட்டு, ஒரு சுத்து மிக்சில விட...
சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

சமையல்
வணக்கம் தோழிகளே,இன்னைக்கு நாம, சப்பாத்தி - காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க. தேவையான பொருள்கள்:மாவு பிசைய: 1.    கோதுமை மாவு -  ½ கிலோ2.    தண்ணீர்- தேவையான அளவு3.    உப்பு- தேவைக்கு  குருமா: 1.    கேரட்- 12.    பீட்ரூட்- 13.    காலிபிளவர்-50 கிராம்4.    பீன்ஸ் – 50 கிராம்5.    உருளை கிழங்கு– 36.    பெரிய வெங்காயம...
தெவயம்/ திவயம்

தெவயம்/ திவயம்

சமையல்
வணக்கம் நண்பர்களே,இன்னைக்கு நாம அரிசி வச்சு, ஒரு அருமையான, எளிமையான இனிப்பு செய்யறது எப்படின்னு பார்க்கலாம். இது கொங்கு மண்டலத்தோட ஒரு ஷ்பெசல் பலகாரம்னு சொல்லலாம். ஆனா, அந்தக் காலத்தில், அரிசியை, ஆட்டுகல்லில் நல்ல நைசா, கெட்டியா அரைச்சு, பிறகு வடசட்டியில் போட்டு, பருப்பு மத்தாலையும், கரண்டியாலயும் குத்தணும். மாவு உதிரியா வர வரை குத்தணும். இது ரொம்பக் கஷ்டம். இதுக்குப் பயந்தே, இப்போ பலபேர் செய்யறது இல்ல. ஆனா, இப்போ நான் சொல்லறது, மிக எளிமையான வழி. :-) தேவையான பொருள்கள்:அரிசி -250 கிராம்நெய் – 5 ஸ்பூன்சக்கரை- 5 / 6 ஸ்பூன்தண்ணீர் – 150 மிலிStep 1:பாத்திரத்தில் அரிசியைப் போட்டு வறுக்கவும். பிறகு ஆறவிடவும்.Step 2:வறுத்த அரிசியை, மிக்சியில் போட்டு மொரமொரப்பாக அரைத்து எடுக்கவும் (தண்ணீர் சேர்க்கக்கூடாது). Step 3:இப்பொழுது தண்ணீர் சேர்த்த்து பிசை...