Shadow

Tag: விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !!புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்க...
கனெக்ட் விமர்சனம்

கனெக்ட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாயா, கேம் ஓவர் முதலிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள பேய்ப்படம். ரெளடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஆன்னாவின் தந்தையான மருத்துவர் ஜோசஃப், கொரோனா காலத்தில் இறந்து விட, தன் தந்தையுடன் பேசவேண்டுமென்ற ஆசையில் ஒயிஜா போர்டின் உதவியோடு, ஆவியுலகத்தைத் தொடர்பு செய்ய முயல்கிறார். அந்தத் தொடர்பை உருவாக்கும் முயற்சி தவறுதலாகி (Wrong connection), தீங்கு விளைவிக்கும் கடவுளுக்கெதிரான சாத்தான் ஆன்னாவின் உடலில் ‘கனெக்ட்’ ஆகி விடுகிறது. அந்த சாத்தான் தனியாக ‘கனெக்ட்’ ஆகாமல் கொரோனாவயும் அழைத்து வந்து விடுகிறது. லாக்டவுனில், அதிலும் குறிப்பாக க்வாரென்டெயினில் மாற்றிக் கொள்ளும் நேரத்தில், அந்த துர் ஆவியை தன் மகளின் உடலிலிருந்து டிஸ் கனெக்ட் செய்ய, ஆன்னாவின் அம்மா சூசன் எப்படிப் போராடுகிறார் என்பதே பட்த்தின் கதை. சிறுமி ஆன்னாவுக்கும், அவளது தந்தைக்குமான பாசம்தான் ...
கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி
மாதம்பட்டி சினிமாஸ் & MJ மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஓர் இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் ...
காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு வயதிலேயே ராசி கெட்டவர் என்ற பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட விஜய்சேதுபதிக்கு இரு காதல் ஒரே நேரத்தில் மலர்கிறது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாவம் என இருவரையுமே காதலிக்கிறார். இவர், இரண்டு ட்ராக்கிலும் ட்ரெயின் ஓட்டுவது காதலிகளுக்குத் தெரிய வர, அடுத்தடுத்து என்னாகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். காத்துவாக்குல ரெண்டு காதலையும் சமாளிக்கும் இடங்களில் விஜய்சேதுபதி காதல் சேதுபதியாகக் கோலேச்சுகிறார். அவர் நடனமாடச் சிரமப்படும் போதும் அவர் மேல் நமக்கே பரிதாபம் வருகிறது. சமந்தாவிற்கும் நயனுக்கும் வராதா என்ன? நயன்தாரா சென்டிமென்ட் காட்சிகளில் கவனம் ஈர்த்தாலும் அவருக்கான வெளி படத்தில் நிறைய இருந்தாலும் இளைஞர்களின் கிளாப்ஸை அள்ளுவதென்னவோ சமந்தா தான். சின்னச் சின்ன மேனரிசங்களில் அசத்தி விடுகிறார். ஒரு கதாபாத்திரத்தின் மனம் என்ன நி...
காத்து வாக்குல ரெண்டு காதல் – ரொமான்டிக் காமெடிப் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் – ரொமான்டிக் காமெடிப் படம்

Trailer, காணொளிகள், சினிமா
தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காமெடி ஜானரான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தென்னிந்தியத் திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான ‘டூ டூடூ டூ டூடூ’ பாடல், ‘ரெண்டு காதல்’, ‘நான் பிழை’ போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதைக் கவர்ந்த பாடலாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர் இணையமெங்கும் பரவலான வரவேற்...
“நாங்க வேற மாரி” – வலிமை

“நாங்க வேற மாரி” – வலிமை

Songs, காணொளிகள்
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேறஎல்லா நாளுமே நல்ல நாளு தான் எல்லா நேரமும் நல்ல நேரம் தான் எல்லா ஊருமே நம்ம ஊரு தான் எல்லாப் பயலும் நல்ல பய தான்.மேல இருக்கவனா நம்ப நல்லா கத்துக்கோ கூட இருக்கவனா நட்பா நல்லா வச்சுக்கோ கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ காலத்தோடு நீயும் ஓட ஒத்துக்கோ.தகதகன்னு மின்னலாம் தெனாவட்டா துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா - ஹே கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா.நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற.நாங்க வேற மாரி நாங்க வேற மாரி - ஆ வேற மாரி ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ ஆய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹேய் இந்தா ஹேய் ...
சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் –  உண்மையெது பொய்யெது?

சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் – உண்மையெது பொய்யெது?

சினிமா, திரைச் செய்தி
சாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப் பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதன் கார்க்கி, “பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், புது வரிகளுக்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் சுஜீத் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் 'மழையும் தீயும்' என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகக் கதாநாயகனைத் தீயாகவும், கதாநாயகியைத் தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிற...
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, 'சொடுக்கு' பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தியாதகத் தெரியவில்லை. சுவாரசியத்தைப் படம் முழுக்கத் தக்க வைக்க ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு உதவியுள்ளது. ஆனாலும், காட்சிகளுக்கு இடையேயான 'ஜெர்க்'கும் அவசரமும், கோர்வையின்மைக்கு வழி வகுத்துள்ளது. ஜான்சி ராணியாகவும், அழகு மீனாவாகவும...
நானும் ரெளடிதான் விமர்சனம்

நானும் ரெளடிதான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை. தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். விஜய் சேதுபதி, பார்த்திபன் என நீங்கள் யாரை எப்படி திரையில் காண விரும்புவீர்களோ, அவர்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதே போல், வேதாளம் பட டீசரில் வரும் ‘தெறிக்க விடலாமா?’, புலி இசை வெளியீட்டில் டி.ஆர். பேசியது, தனுஷின் ‘இல்ல?’ என மக்களின் கவனத்தை ஈர்த்தவைகளை சாதுர்யமாக ...
அஜித் சார்ன்னா பாசிடிவ்

அஜித் சார்ன்னா பாசிடிவ்

சினிமா, திரைத் துளி
எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன். “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளைச் சேர்த்து மாற்றியதும் பாடல் பதிவு செய்யப்பட்டது.” கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்திச் செல்லும். இப்பாட்டு ஒரு குத்துப் பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜித் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு '...