Shadow

Tag: விவேக்

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன்

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன்

சினிமா, திரைத் துளி
மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்!நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது....
தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென பல படங்களைச் சொன்னாலும், உள்ளபடிக்கு அது மிகச் சில படங்களுக்கே பொருந்தும். அதிலொன்று இப்படம். காரணம், லெஜண்ட் சரவணன். தனக்குத்தானே சூடிக் கொண்ட விருப்பப் பெயரைப் படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மாஸ் படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உடைய படமாக வந்துள்ளது. காமெடி, சண்டை, சென்ட்டிமென்ட், சமூக அக்கறை என ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாதென கவனமாகக் கதையைக் கோர்த்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான சரவணன், தனது ஊர் மக்களுக்குப் பயன்படும்படி ஏதாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார். வாத்து மேய்க்கும் கணிதப் பேராசிரியையான துளசி மீது கண்டதும் காதல் வருகிறது. சரவணின் நண்பன் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் சரவணன். அதனால், சில தனிப்பட்ட இழப்புகளையும், பல ...
“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்

“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்

சினிமா, திரைத் துளி
லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், 'மொசலோ மொசலு' பாடல் 14 மில்லியன் மற்றும் 'வாடிவாசல்' பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களைத் தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தைப் பார்த்ததும், "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, "நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்" எனக் கூறி அ...
தாராள பிரபு விமர்சனம்

தாராள பிரபு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் புரிந்துள்ளார். தன் வசன உச்சரிப்பாலும், கண்ணை உருட்டும் நடிப்பாலும் படத்திற்குக் கலகல டோன் கொடுத்துள்ளார் விவேக். ஜாலியான படத்திற்குத் தனியொரு நபராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தடம் படத்து நாயகி தான்யா ஹோப், நிதி மந்தனா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதிகம் பேசாதவராக அறிமுகமாகி, மெல்ல நாயகன் மேல் விருப்பம் கொண்டு, மிக மெச்சூர்டாக...
எழுமின் விமர்சனம்

எழுமின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!" என்பது விவேகானந்தரின் வாக்கு. விஸ்வநாதன், அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடங்கும் பொழுது, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விவேகானந்தரின் இவ்வாக்கை மேற்கோள் காட்டியே உரையாற்றுகிறார். இது மாணவர்களுக்கான படம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அப்துல் கலாமும், பதாகைகளில் வலம் வருகிறார். மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்றும், விளையாட்டுத் துறையில் நிலவும் ஊழல் குறித்தும் படம் பேசுகிறது. அஜய் குங் ஃபூவிலும், கபின் கராத்தேவிலும், வினீத்தும் அர்ஜுனும் பாக்ஸிங்கிலும், சாரா ஜிம்னாஸ்டிக்கிலும், ஆதிரா சிலம்பத்திலும் திறமைசாலிகள். இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இதில் நான்கு பேர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வருபவர்கள். 'படிக்காமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?' என்ற எண்ணமுடைய அவர்களின் பெற்றோர்களைச் சமாதானம் செய்து, மாணவர்கள் விருப்பப...
பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம். கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே! கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம்...