Shadow

Tag: ஷா ரா

ஷுட் த குருவி விமர்சனம்

ஷுட் த குருவி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம். குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன். கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்றமு...
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது. சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச் ...
டைரி விமர்சனம்

டைரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி. பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்களுக்கும், பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை, விசாரணையில் இருந்து விலகி, பேருந்திற்குள்ளேயே சிறிது நேரம் பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் தோடர் மக்கள், மகனைப் பிரிந்து...
டிக்கிலோனா விமர்சனம்

டிக்கிலோனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் 'ஜென்டில் மேன்' உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று 'டிக்கிலோனா'. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம். 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்' என்பது தான் படத்தின் ஒன்லைன். எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்? டிக்கிலோனா படத்தின் கதை அது தான். தன் மணவாழ்க்கையை மாற்றிக் கொண்டால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என காலப்பயணம் மேற்கொள்கின்றான் மணி. காலப்பயணக் (Time travel) கதையை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி. சந்தானம் மிக ஸ்லிமாக ஸ்மார்ட்டாக உள்ளார...