
“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, "லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான். பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றைச் சொன்னார். அந்தக் கதைக்காக சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்குத் தயார்ப்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குநரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியை...











