32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

ஜான்சன்

29 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன் சினிமா

‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவ்வனுபவத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன், ” ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் […]

19/06/2019 Dinesh R
‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங் சினிமா

‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்

NGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், “செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் […]

24/05/2019 Dinesh R
‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி சினிமா

‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

NGK படத்தில் செல்வராகவனின் பட்டறையில் நடிக்கும் பொழுது கிடைத்த அனுபவத்தைக் குறித்து நடிகை சாய் பல்லவி, “முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே, ‘இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும்’ என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் செல்ஃபோன் […]

24/05/2019 Dinesh R
மான்ஸ்டர் விமர்சனம் சினிமா

மான்ஸ்டர் விமர்சனம்

அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் […]

20/05/2019 Dinesh R
அயோக்யா விமர்சனம் சினிமா

அயோக்யா விமர்சனம்

2015 ஆம் ஆண்டு, வக்கந்தம் வம்சியால் எழுதப்பட்டு, பூரி ஜெகன்னாதரால் இயக்கப்பட்ட ‘டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் உத்தியோகபூர்வ மறு உருவாக்கம் இப்படம். பணமே சகல அதிகாரங்களையும் தருமென்பதையும், காவல்துறையில் சேர்ந்தால் அப்பணத்தை சுலபமாக அடையலாம் என்பதையும் சிறு வயதிலேயே கண்டுணர்கிறான் யாருமற்ற அநாதை சிறுவனான கர்ணன். காவல்துறையில் சேருவதை லட்சியமாக்கி, கொண்ட லட்சியத்தின் படி போலீஸாகவும் ஆகி, அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து சகல வழிகளிலும் பணத்தை அடைகிறான். அத்தகைய அயோக்கியனை சமயச்சந்தர்ப்பம் யோக்கியனாக மாற்றுவதுதான் படத்தின் […]

12/05/2019 Dinesh R
எமதர்மராஜா யோகி பாபு சினிமா

எமதர்மராஜா யோகி பாபு

தர்மபிரபு படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக ரேகாவும், அப்பாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரேகா, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர், ‘அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரைப் […]

09/05/2019 Dinesh R
நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும் சினிமா

நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமான நீயா 2-வில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் உள்ளது. அந்தப் பாம்பைப் பற்றியும், கிராஃபிக்ஸ் பற்றியும் கிராபிஃக்ஸ் நிபுணரான வெங்கடேஷ், “தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்குச் சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரைச் சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் […]

09/05/2019 Dinesh R
காற்றின் மொழி விமர்சனம் சினிமா

காற்றின் மொழி விமர்சனம்

‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ – Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் […]

17/11/2018 Dinesh R
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா சினிமா

ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இரண்டாவது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டுமெனக் கவனமாக இருக்கிறார். […]

14/11/2018 Dinesh R
ஜீனியஸ் விமர்சனம் சினிமா

ஜீனியஸ் விமர்சனம்

ஜீனியஸ் என்பதற்கு மேதை எனப் பொருள் கொள்ளலாம். யார் மேதை, எது மேதைத்தன்மை அல்லது மேதையாய் இருப்பது அவசியமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ஏழாவது வரை ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் குமாரை, அவனது தந்தை ராம் மூர்த்தி தினேஷைக் கூண்டிலடித்து, படிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என அவனது பதின்பருவத்தைச் சிறைபிடித்து விடுகிறார். ஒருநாள், அவன் வளர்ந்து நல்ல வேலையில் இருக்கும் பொழுது, அவனது மூளை ஷட்-டவுன் ஆகிவிடுகிறது. தனக்குள் பேசிக் கொண்டிருப்பது, […]

26/10/2018 Dinesh R
சண்டக்கோழி 2 விமர்சனம் சினிமா

சண்டக்கோழி 2 விமர்சனம்

2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம். ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய […]

22/10/2018 Dinesh R
மதுரவீரன் விமர்சனம் சினிமா

மதுரவீரன் விமர்சனம்

தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். ‘பூ’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் […]

03/02/2018 Dinesh R
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் சினிமா

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, ‘சொடுக்கு’ பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி […]

13/01/2018 Dinesh R
அருவி விமர்சனம் சினிமா

அருவி விமர்சனம்

அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய் எழும் அதன் வேகத்தில் தலையை நுழைப்பது விவரிக்க இயலா ஆனந்தத்தைத் தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டத் தொடங்கிவிடும். சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அருவியில் கரைவது குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இப்படமும் அத்தகைய உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. அருவி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கை, அதன் பாதையில் இருந்து விலக நேர்கிறது. எங்கோ தொடங்கி […]

15/12/2017 Dinesh R