
சரண்டர் விமர்சனம் | Surrender review
தேர்தல் நேரம் என்பதால் தனது தப்பாக்கியைத் திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதை வாங்கி வைக்கும் ரைட்டர் பெரியசாமி, துப்பாகியைத் தவற விட்டுவிடுகிறார். ட்ரெயினி எஸ்.ஐ.யான புகழிடம், வெளியில் தெரியாமல் ரகசியமாகத் துப்பாக்கி கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.
கனகராஜ் எனும் ரெளடி, தேர்தல் செலவுக்காகப் பத்து கோடியை ஆய்வாளர் வில்லியம்ஸிடம் கொடுத்துவிடுகிறார். அந்தப் பணம் காணாமல் போகிறது. கனகராஜின் தம்பி (ஸ்பாட் படத்தின் நாயகன் கெளஷிக்), ஒரு சின்ன தகராறில் ரைட்டர் பெரியசாமியை உள்ளாடையுடன் நிற்க வைத்துவிடுகிறார். காவல்துறை உயரதிகாரிகளும், கனகராஜின் பக்கம் நின்று மெளனம் சாதிக்கிறார்கள். ஆனால், பெரியசாமி தனது தந்தையைப் போன்றவரென ஆவேசம் இளம் எஸ்.ஐ.யான புகழ், கெளஷிக்கை அடித்துக் கோமாவில் தள்ளிவிடுகிறான். கனகராஜ் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்க...









