Shadow

Tag: நிகில்

செண்பககோட்டை விமர்சனம்

செண்பககோட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி வாங்குவதற்காக ஜெயராமின் மகள் மீது புகுந்து கொள்கிறது. அவ்வேதனையில் இருந்து அக்குடும்பம் எவ்வாறு மீள்கிறது என்பதுதான் படத்தின் கதை. ‘ஆடுபுலியாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் இது. கதை தொடங்குவதற்கு முன்பே கவரும் விஷயமாக கேமிரா கோணங்கள் உள்ளது. வனத்தின் வசிகரீக்கும் கலர் டோனும் தொடக்க காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். பேயாகிக் கணவனைக் காக்கும் வனராணியும், அந்த செண்பகக்கோட்டையின் ஃப்ளாஷ்-பேக் எபிசோட்டும் நல்லதொரு தொடக்கம். தினேஷ் பல்லத்தின் கதையில், வலிமையான கதாபாத்திரங்கள் இருந்தும் திரைக்கதை அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் படிந்து விட்டதொரு குற்றவுணர்ச்சி கோடீஸ்வரரான ஜெயராமைத் தூங்க விடாமல் அலைக்கழிக்கிறது; பசியால் துடித்து இறந்து போன தன் மகளின் மரணத்திற்குப்...
அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்பதை எந்தச் சிரமமுமின்றி யூகிக்கலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நாயகன், நாயகியின் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுதுகிறான். அதன் முதல் வரி தான் படத்தின் தலைப்பு. நாயகன் ரிஜன் சுரேஷ் நாயகி ஆர்ஷிதாவைக் காதலிக்கிறான். நாயகிக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. ஆனால், நாயகியைச் சுற்றுவதையே முழு நேர வேலையாகச் செய்கிறான். நாயகி கோபமாகத் தன்னை விட்டுவிடுமாறு கேட்கிறாள். நாயகன் ரொம்ப ஃபீலாவதால், டாஸ்மாக்கில் இருந்து அவனது நண்பர்களை அவனை அழைத்துக் கொண்டு துரைப்பாக்கம் மேம்பாலத்துக்கு வந்துவிடுகிறார்கள் ஒரு பாட்டுடன். வியாசர்பாடி அண்ணன் கேடி வந்தா லேடி தந்தா தாடி … என நாயகனின் சோகத்தைப் பாட்டாகப் படிக்கிறார்கள். நாயகி பொறுத்துக் கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் தருகிறாள். “அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல? ஏன்டா பின்னாடியே போய் டார்ச்சர் செய்ற?”...
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம்...
கண்ல காச காட்டப்பா விமர்சனம்

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர். கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதுதான் படத்தின் கதை. கெட்டவனாக யோகி பாபு. டானாக (Don) வரும் கல்யாண் மாஸ்டரின் உதவியாளாக வருகிறார். படத்தில் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்க்கிறார். "இருபது கோடி!!" என அதிசயித்து, "டொன்ட்டி லேக்ஸ்" என அவர் முடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ...
பட்டதாரி விமர்சனம்

பட்டதாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை. சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது நண்பர்கள் அனைவரும் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, அபிசரவணன் மட்டும் விதிவிலக்காய் இருக்கிறார். எந்தப் பெண்ணாவது கை கொடுத்தால் கூட, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவார். ‘வாவ்..’ என நாயகனின் இந்தக் குணம் கண்டு காதலில் விழுகிறார் நாயாகி அதிதி. இலக்கியா எனும் அவர் ஏற்றிர...
கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர்

கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> அரவிந்த் ஆகாஷ் >> எம்.எஸ்.பாஸ்கர் >> விச்சு விஸ்வநாத் >> யோகி பாபு >> அஸ்வதி >> சாந்தினி >> கல்யாண்பணிக்குழு:>> தயாரிப்பு - சுகர், கல்யாண், அரவிந்த், மேஜர் கெளதம் >> திரைக்கதை இயக்கம் - 'மேஜர்' கெளதம் >> ஒளிப்பதிவு - அரவிந்த் >> படத்தொகுப்பு - செல்வம் >> இசை - திவாகர் சுப்ரமணியம் >> கதை - S.G.சேகர் (SGS) >> வசனம் - ராதாகிருஷ்ணன் >> நடனம் - கல்யாண், கிருஷ்ணா >> கலை - P.A.ஆனந் >> பாடல் - விக்கி சுபோ, திவாகர் சுப்ரமணியம் >> மக்கள் தொடர்பு - நிகில்...
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

சினிமா, திரைச் செய்தி
ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில் ஷ...