Shadow

Tag: பூரி ஜெகன்நாத்

“Slum Dog: சக்திவாய்ந்த விஜய் சேதுபதியைக் காணலாம்” – பூரி ஜெகன் நாத்

“Slum Dog: சக்திவாய்ந்த விஜய் சேதுபதியைக் காணலாம்” – பூரி ஜெகன் நாத்

சினிமா, திரைச் செய்தி
பூரி கனெக்ட்ஸ் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்ஷன் திரைப்படம் “ஸ்லம் டாக்” ஆகும். இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சார்மி கௌர், “2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக வந்துள்ளேன். எங்கள் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ்த் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. ‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்ஷன் காட்சிகளைய...
Slum Dog – 33 டெம்பிள் ரோடில் அரிவாளுடன் விஜய் சேதுபதி

Slum Dog – 33 டெம்பிள் ரோடில் அரிவாளுடன் விஜய் சேதுபதி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்ஷன் திரைப்படம் “ஸ்லம் டாக்” ஆகும். இந்தப் படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் அடுத்தகட்ட ப்ரோமோஷன் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதி...
டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

Movie Posters, அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்". மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோ...
லைகர் விமர்சனம்

லைகர் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு தேசிய சாம்பியன்ஷிப்பை வென்று, சர்வதேச போட்டிக்காக அமெரிக்கா செல்கிறான். சர்வதேச சாம்பியன்ஷிப்பை அவனால் பெற முடிந்ததா என்பதே படத்தின் கதை. ‘ஆக்ஷன் ஸ்போர்ட்’ என படத்தினை வகைப்படுத்தியுள்ளனர். முதல் அரை மணி நேரம் மட்டும் அப்படி தீயாக ஆரம்பிக்கும் படம், அதே வேகத்தில் காதல் எனும் குறுக்கு...
LIGER | மைக் டைசன் – விஜய் தேவரகொண்டா

LIGER | மைக் டைசன் – விஜய் தேவரகொண்டா

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER (Saala Crossbreed ) படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார்!இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழுப் படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தற்போது, மைக் டைசன் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார். இது குறித்து ஒரு வீட...
JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன்மொழி இந்தியப் பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும். இது, அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கெளர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான...
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன்

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியp படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுடன் படு ஸ்டைலிஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில், 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022 என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்...