
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்னச் சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங் என எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டைக் கெடுக்காமல் மிக அழகாக...












