Shadow

Tag: யுவராஜ்

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம், ‘பெஹன் ஹோகி தேரி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், “இந்தப் படம், என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்குத் தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட! அவருடைய அறிவுரை எனக்குத் திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு ச்சந்தோஷத்தைக் கொடுத்தது” என்றார். முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவத...
வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

சினிமா, திரைத் துளி
பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார். இதைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது, "வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்கிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்" என்றனர். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள், தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர். அழகுடன் வீரமும் மிளிர, சங்கமித்ராவில் ஸ்ருதியின் பாத்திரம் ரசிகர்...
துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்

துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்

சினிமா, திரைத் துளி
'அரபு தாக்கு' படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, “துபாயைக் கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படமிது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடித் துபாய்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படிச் சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால், அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான். இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழே தெரியாத பெர்குஸார் கொரல் (Bergu...
செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பே கதை. நாயகனைக் கழற்றி விட்டு விடுகிறார் நாயகி. பின் நாயகனின் நிலை என்ன ஆனதென்றும், அவனை ஏமாற்றிய நாயகியை அவன் என்ன செய்தான் என்பதும்தான் படத்தின் கதை. நாயகனின் மனநிலையை அலசியது போல், நாயகியின் மனமாற்றத்திற்கான காரணத்தை அலசாமல், ‘சில பொண்ணுங்க இப்படித்தான்! ஆள் மாத்திட்டுப் போயிட்டே இருப்பாங்க’ என்ற வலிந்து திணிக்கப்பட்ட தொனியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 106 நிமிடங்களே படம்! படத்தின் முதற்பாதி போனதே தெரியாமல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது. ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் நாயகனின் அம்மாவும் தங்கையும், தூக்கில் தொங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் துணியை நடு வீட்டில் காண்கின்றனர். நாயகனை ஐந்து நாட்களாகக் காணவில்லை. அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல் தவிக்கின்றனர் அவனது நண்பர்கள். இடையிடையே, நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படிக் காதல் மலர்கின்றதெனச் சொல்கின்றனர். இரண்டாம் பாதியில்த...
நிசப்தம் விமர்சனம்

நிசப்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்குமே நடந்துவிடக் கூடாத கொடுமை, ஓர் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை நிசப்தத்தில் தள்ளி விடுகிறார் இயக்குநர் மைக்கேல் அருண். படத்தின் முதல் பாதி முழுவதுமே அவஸ்தையுடனே அமர வேண்டியுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தன் எட்டு வயது மகளின் ரத்தம் தோய்ந்த கால்களைக் காண நேரிடும் தாயின் மனநிலையை கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை. அச்சிறுமியும், அவளின் பெற்றோரும் அக்கொடிய அதிர்ச்சியில் (mental trauma) இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் இரண்டாம் பாதி. வாழ்வின் மீதான நம்பிக்கையை முதற்பாதி குலைக்கிறது என்றால், சிறுமியின் புன்னகையை மீட்டு இரண்டாம் பாதி படம் நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது. சில ரணங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாதெனினும், முடங்கி விடாமல் அதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமே என சுபமாய் படம் முடிகிறது. "எல்லா ஆம்பிளைங்களு...
இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...