லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.
இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவைக் கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
படத்தைப்...
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜினி...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டிகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா, கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.இந்தத் தொடக்க விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது....
விக்ரம் வேதாவிற்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படம், படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு சான்று” என்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயிஷா...
பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம்.
படத்தின் பிரதான...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-விற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொ...
மாஃபியாகளிடம் ரியல் எஸ்டேட் சிக்கிக் கொண்டது என்பதன் குறியீடு தான் படத்தின் தலைப்பு.
ஸ்டீஃபன் எனும் சிவில் இன்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார். அவரது ஆவி அந்த பில்டிங்கில் சுற்றுவதாக பீதி பரவ, அதை விசாரிக்க எஸ்.ஐ. கர்ணா நியமிக்கப்படுகிறார். ஸ்டீஃபன் கொலையிலுள்ள மர்மமென்ன என்பதுதான் படத்தின் கதை.
படம் நேரடியாகக் கதைக்குச் செல்லாமல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ரஹ்மான், நிகில் மோகன், தலைவாசல் விஜய், ஸ்வாதி தீக்ஷித், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, ஆகாஷ், இனியா, மனோபாலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் அறிமுகம் முடிந்த பின்னும், திரைக்கதை சூடு பிடிக்காதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விட கொடுமையான சங்கதி, ரஹ்மான் இரண்டே காட்சிகளில் தலைகாட்டுவதோடு மாயமாகி விடுகிறார். நாயகி ஸ்வாதி தீக்ஷித்தோ மூன்றே மூன்று காட்சியிலும...
‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இவர் பேசுகையில்,‘ நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன்.
பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படப்பிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்குப் பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக் கொண்டே...
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜூன் 25 அன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
படத்தின் இயக்குநர் ஜாய்சன் பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு த்ரில்லர் படம். நடிகர் ரகுமான், நடிகை இனியா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் பேசுகையில், “இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவருடன் பாடல் எழுதிய அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். சென்னையிலி...
சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேஷனின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனைத் தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது, “இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக் கூடிய கண் கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும்” என்றார்.
இந்தக் கண்க...
நாயகன் வெற்றி ஓட்டும் டெம்போ வேனின் பெயர் ‘தங்கரதம்’ என்பதே படத்தின் தலைப்பிற்குக் காரணம். ஆனாலும், டாஸ்மாக் பாரில் வரும் பாடலில், ‘தங்கரதம் போல ஸ்டீல் பாடி’ என குடிக்காரர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் புகழும் வரி ஒன்று வருகிறது.
கரியாம்பட்டியிலிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்குக் காய்கறிகளை இரண்டு டெம்போ வேன் கொண்டு செல்கிறது. ஒன்று, நாயகன் வெற்றியுடைய ‘தங்கரதம்’; இன்னொன்று, கதாநாயகியின் அண்ணன் செளந்தரராஜாவினுடைய ‘பரமன்’ வேன். இருவருக்குமிடையே எப்பொழுதும் பலமான தொழிற்போட்டி நிலவி வருகிறது. நாயகனுக்கோ நாயகி மீது காதல்! அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை.
மிக அழகானதொரு கதையை எடுத்தாண்டுள்ளார் இயக்குநர் பாலமுருகன். கிராமிய மனம் கமிழும் இந்த மென் காதல் கதைகளின் காலம் முடிந்து இரண்டு தசாப்தங்கள் போலாகிவிட்டது. இரண்டு மணி நேரத்திற்குக் குறைவான படமாய்க் குறைத்தும், ஒப்பேத்துவதற்கான...