Shadow

Tag: Columbia Pictures

Spider-Man: Brand New Day விமர்சனம்

Spider-Man: Brand New Day விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம். முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளைய...
28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Years Later விமர்சனம் | 28 YL review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த 'ஸ்லம்டாக் மில்லியனர் (2008)' படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 ஆண்டுகளான பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. புனித தீவு என்று அழைக்கப்படும் லண்டிஸ்ஃபானில் (Lindisfarne) தனது 12 வயதான மகன் ஸ்பைக்குடன் மெயின்லேண்ட்க்கு ஜோம்பி வேட்டைக்குப் போகிறார் ஜேமி. வேட்டையை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பும் ஸ்பைக், மெயின்லேண்டில் தனியாக ஒரு மருத்துவர் வாழுவது தெரிய வர, உடல...
ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...