Shadow

Tag: D.இமான்

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

சினிமா, திரைத் துளி
GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'நாளைய தீர்ப்பு' படத்தில், விஜயின்...
”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

சினிமா, திரைச் செய்தி
உலகிலேயே முதல் முறையாகத் திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசையையும் ட்ரெய்லரையும் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு ந...
“பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் ‘மான் வேட்டை’ இயக்குநர் திருமலை” – ரவி மரியா

“பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் ‘மான் வேட்டை’ இயக்குநர் திருமலை” – ரவி மரியா

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் PL தேனப்பன், "படங்களில் சின்ன படம், பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்" என்றார். அம்மா க்ரியேஷன்ஸ் T.சிவா, "எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்தப் படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்தப் படம் குறைந...
காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

சினிமா, திரைச் செய்தி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் நாகிநீடு, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதைப் புரிந்து கொண்ட சசிகுமார் எனக்குப் படம் முழுவதும் தனது ஆதரவைக் கொடுத்தார். என்ன...
உடன்பிறப்பே விமர்சனம்

உடன்பிறப்பே விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஜோதிகாவின் 50 ஆவது படம். தனது இரண்டாவது இன்னிங்ஸில், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். எல்லா வயதினருக்கும் இங்கே ஒரு வாழ்க்கையும் கதையும் உண்டு என்பதைத் தமிழ் சினிமா பொருட்படுத்துவதில்லை. நாயகனுக்கு எத்தனை வயதானாலும், நாயகியைச் சுற்றியோ, சுற்றி வர வைத்தோ காதல் செய்யும் கதாபாத்திரங்களையே ஆண் நடிகர்கள் விரும்ப, கதையின் நாயகியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனக்கென்றொரு தனிப்பாதையை உருவாக்கி, அனைவருக்கும் முன்மாதிரியாக உருமாறியுள்ளார் ஜோதிகா. இவையெல்லாம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்டாலே சாத்தியமாகியுள்ளது. இம்முறை, சசிகுமார், சமுத்திரக்கனி என இரண்டு நாயகர்களுடன் திரையேறியுள்ளார் ஜோதிகா. சசிகுமார், ஜோதிகாவின் அண்ணனாகவும், சமுத்திரக்கனி, ஜோதிகாவின் கணவராகவும் நடித்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் அகிம்சை கணவருக்கும், சத்தியத்தை மதிக்கும் அடிதடி அண்ணனுக்கும் இ...
சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்" - சிவகார்த்திகேயன் "வர வச்சுடலாம்." - பொன்ராம் "எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?" "ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்." "ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. 'இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!' என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க." - சி.கா "அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?" - பொ.ரா "கண்டிப்பா வேணும் பங்கு. எம்.ஜி.ஆர். லெவலுக்குப் போனா வைவாங்க, அதுமில்லாம அது ரொம்ப ஓல்ட் ஸ்டைல். நாம சின்னதா பாகுபலி அளவுக்கு, ராஜமெளலி 'மஹாதீரா'ல வச்ச மாதிரி லேசா ராஜா சீனை வச்சுப்போம்." "சரி அப்படியே பண்ணிடலாம்." "முழுசா பாகுபலி மாதிரியும் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். டச் கண்டிப்பா வேணும். நம்பியார் கிட்ட இருந்து...
சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே! அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செ...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பி...
போக்கிரி ராஜா விமர்சனம்

போக்கிரி ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்' என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை. யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். "எனக்கே விபூதி அடிக்கிறாயா?" என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, "பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?" என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும்...