
BAD GIRL – Coming of Age Family Drama
காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காகத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் "BAD GIRL" படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Coming of Age Family Drama "BAD GIRL" படமானது வரும் 30 ஜனவரி, 2025 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் 54 ஆவது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர்கள்:-அஞ்சலி சிவராமன்
சாந்தி பிரிய...