Shadow

Tag: ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் நான் கடவுள் , அங்காடித் தெரு , நீர்ப்பறவை ,கடல், 6 மெழுகுவத்திகள், காவியத் தலைவன் , பாபநாசம்,சர்கார் ,2.0 , வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை பாகம் 1 போன்ற படங்களுக்கு வசனம் எழுதி திரைக்கதையிலும் பங்களிப்பு செய்தவர் எழுத்தாளர் ஜெயமோகன்.இவர் மணிரத்னம், ஷங்கர், பாலா,கௌதம் வாசுதேவ் மேனன், வஸந்த், ஏ.ஆர்.முருகதாஸ் வசந்தபாலன், சீனு ராமசாமி, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவர்.மலையாளப் படங்களிலும் இவ்விதத்தில் பணியாற்றி வருபவர்.இப்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 , சீனுராமசாமியின் இடிமுழக்கம் போன்ற படங்களில் பணிபுரிந்து வருகிறார்.எழுத்தாளர் ஜெயமோகன் -அருண்மொழி நங்கை தம்பதியரின் மகன் அஜிதனுக்கும் கோவை B. ரமேஷ் -சுந்தரி தம்பதியரின் மகள் மீனாட்சி என்கிற தன்யாவுக்கும் கோவையில் திருமணம் நடைபெற்றது. இவர்களி...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றும...
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்தி...
2.0 விமர்சனம்

2.0 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்‌ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்! படம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். டைட்டில் கார்டிலேயே, பார்வையாளர்களை 3டி தொழில்நுட்பம் பிரம்மிக்க வைத்துவிடுகிறது. பெரிய பூர்வாங்க பில்டப்கள் இல்லாமல், கதைக்குள் உடனடியாகச் சென்று விடுகிறது படம். சென்னையைச் சுற்றி 200 கி.மீ.இல் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் பறந்து மாயமாகின்றன. அது ஏன், எப்படி, யாரால் நிகழ்கிறது என்பதும், அதை வசீகரனும...
ஏமாலி விமர்சனம்

ஏமாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை - கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். 'கஸ்கா முஸ்கா' என்று ஜெயமோகன் தனது வசனங்களால்...
கலை உத்தியஸ்தர்

கலை உத்தியஸ்தர்

கட்டுரை, புத்தகம்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார். “தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?” “ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?” “கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?” ‘பேராசானா?’ என யோசித்த ...
வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...