Shadow

Tag: கமல்

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

சினிமா, திரைச் செய்தி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிஞர் வெண்ணிலா பேசும்போது, "எனது நண்பன் இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவைச் சந்திப்பதற்க...
விஸ்வரூபம்.. II விமர்சனம்

விஸ்வரூபம்.. II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன? ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர். அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்ல...
லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம், ‘பெஹன் ஹோகி தேரி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், “இந்தப் படம், என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்குத் தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட! அவருடைய அறிவுரை எனக்குத் திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு ச்சந்தோஷத்தைக் கொடுத்தது” என்றார். முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவத...
தூங்கா வனம் விமர்சனம்

தூங்கா வனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்தரம...
ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

சமூகம்
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார். J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது. தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்....
தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

சினிமா, திரைத் துளி
“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், மெட்டல் மியூஸிக் ஒன்னு இருக்குன்னு நாம ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலைன்னா வேற யார் சேர்ப்பா?’ என என்னிடம் கேட்டார். இதுல நானொரு பாடம் கத்துக்கிட்டேன். புதுசா ஒன்னு ஆடியன்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது” என்றார். “ஜிப்ரனின் வாய் பேசாது; அவரது வாத்தியங்கள் பேசும்” என ஜிப்ரானைப் புகழ்ந்த வைரமுத்து, “ஒருநாள...
பாபநாசம் விமர்சனம்

பாபநாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் குடும்பத்தை உலகமாக நினைத்து வாழுபவர் அண்ணாச்சி சுயம்புலிங்கம். அந்த சின்னஞ்சிறு உலகத்தில், அழையாத விருந்தாளி ஒருவரால் சிக்கலொன்று ஏற்படுகிறது. அச்சிக்கலால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்படி சுயம்புலிங்கம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. படத்தின் முதற்பாதி, அதன் மூலமான மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆர்ப்பட்டமில்லாத காட்சிகளாய் நகர்கின்றன. அதை கலகலப்பாக்குவது எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களே. அங்காடித் தெரு படத்துக்குப் பின், இப்படத்திற்கே கைதட்டல்களைப் பெறுகின்றன அவரின் வசனங்கள். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புக்கு உதவிய எழுத்தாளர் சுகாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யத்தின் ஜோர்ஜ் குட்டி முகத்தில் எந்த பாவனையும் காட்டாதவர்; மன்னிப்பைக் கூட, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கலங்காமல் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் கை கட்டிக் கேட்பவர். மாறாக பாபநாசத்தின் ஒட்டு மீசை ...
உத்தம வில்லன் விமர்சனம்

உத்தம வில்லன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரம(க்குடி) நாத்திகரான கமல்தான், சக மனிதர்களை நேசிப்பவர் கடவுள் என அன்பே சிவம் படத்தில் சொல்ல வேண்டியிருந்தது. இம்முறை, உத்தம வில்லனில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த ஆத்ம விசாரம் செய்துள்ளார். யாருமே வில்லன் இல்லை என்பதுதான் படத்தின் கரு. பின் யார்தான் உத்தம வில்லன்? இந்த வசீகரமான தலைப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்களைக் கொணர்ந்துள்ளார் கமல்!? 1. உத்தமன் என்பவர் கதை சொல்ல தமிழக வில்லுப்பாட்டையும் (வில்லன்), கதையின் களம் செல்ல கேரள தெய்யத்தையும் இணைத்து கூத்து கட்டுபவர். 2. உத்தமன் கட்டும் பிரதான வேடம் வில்லனான (வில்லாளியான) அர்ஜூனன் வேடம். 3. தன் பெண்ணின் விருப்பத்துக்காக, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்கிறார் உத்தம அப்பாவான பூர்ண சந்திர ராவ். 4. கள்ளக் காதலியுடன் தொடர்பில் இருந்தாலும், குடும்பத்தின் மீது பாசத்தைப் பொழிகிறார் உத்தம ஹீரோவான மனோரஞ்சன். 5. படத்துக்குள் எடுக்கப்படும் படத்தின் பெ...
வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...
பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

சினிமா, திரைத் துளி
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித...
“என் மூலதனம்” – கமல்

“என் மூலதனம்” – கமல்

சினிமா, திரைச் செய்தி
‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த ஒரு நடிகைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு லகர, ளகர உச்சரிப்பு சரியா வராது. ஆனா ஆண்ட்ரியா அச்சரம் பிசகாம உச்சரிக்கிறாங்க. முதல்முறையாக ஒரு ஆர்டிஸ்டுடன் வேலை செய்த திருப்தி கிடைத்தது. ஷூட்டிங்கின் பொழுது மொபைலில் ஏதோ கேட்டுட்டே இருப்பாங்க. என்னன்னு கேட்டப...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அரசியல், கட்டுரை
அனுப்புநர்:பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111.பெறுநர்:கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. +91 44 24336348.மதிப்பிற்குரிய ஐயா,பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவினு...
விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.படத்தின் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் கமல் என்னும் உன்னத கலைஞர் தனது நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார். அவரது நடனம், பார்வை, நடை, வசனம் பேசும் தொனி என சகலத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அதன் பின் படத்தில் கோலேச்சுவது இயக்குநர் கமல். தமிழ் சினிமா கண்டிராத ஒரு தொழில்நுட்ப விருந்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். படத்தின் மாபெரும் பலம் வசனங்கள். வசனங்களுக்கு Epigram என்றொரு தனி குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் நாயகன் இரத்தம் வருமளவு உதை வாங்கும் பொழுதும்.. வசனங்கள் அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. அதே போல் நாயகிக்கும், எஃப்.பி.ஐ. அதிகாரிக்கும் நடக்கும் கடவுள் பற்றிய உரையாடல் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் பெண்ணை ...