
சரீரம் விமர்சனம் | Sareeram review
தமிழ் சினிமாவில் காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தைத் தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையைச் சொல்லும் ஒரு படம் தான் சரீரம். இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கித் தயாரித்துள்ள, உன்னதமான காதலையும், கடவுள் தந்த சரீரத்தின் பெருமையைப் பேசும் இப்படத்தில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கல்லூரியில் படிக்கும்போதே காதல் வயப்படும் ஜோடியின் காதலுக்கு நாயகியின் பணக்காரக் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களிடம் இருந்து ஓடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அங்கும் அவர்கள் துரத்த தங்கள் புனிதமான காதலுக்காக நாயகன் பெண்ணாகவும், நாயகி ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாகப் பாலின மாற்றத்தை அடைந்தார்களா, அந்தக்...








