
Good Bad Ugly விமர்சனம் | GBU review
அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக்.
ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற AK மீண்டும் ரெட் டிராகன் ஆவதுதான் கதை.
‘அவர் யார் தெரியுமா? ரெட் டிராகன் யார் தெரியுமா? AK யார் தெரியுமா?’ என வில்லன் அர்ஜுன் தாஸைத் தவிர அத்தனை பேரும் படம் நெடுகே கேட்டு, அவரது புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ‘அசாஸின் ஜான்விக்கைக் காப்பாத்தினவர், கொரியன் டான் டோங் லீயே AK-வின் தைரியத்தைப் பா...