Shadow

Tag: Pentagan Public Relations

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

சமூகம்
இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals). சென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே! “50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் கனவு’ என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அந்தக் கனவு, அமெரிக்காவின் உருவாக்கத்தில் மகத்தான பங்கை வகித்தது. அதைப் போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு! அதன் வெளிப்பாடுதான், Naturals Enable எனும் இந்த முயற்சி. நேச்சுரல்ஸின் 611 கிளைகளிலும் இந்த வருட இறுதிக்குள், மாற்றுத் திறனாளர்களைப் பெருமளவில் பணியில் அமர்த்தவுள்ளோம்” என்றார் நேச்சுரல்ஸ் நிறுவனத...
சென்னை மருத்துவருக்குக் கெளரவம்

சென்னை மருத்துவருக்குக் கெளரவம்

மருத்துவம்
சென்னையைச் சேர்ந்த வலி நிவாரண மருத்துவரான திரு. கார்த்திக் பாபு நடரஜானுக்கு, 'Pain Physician of the Year' எனும் விருது தரப்பட்டுள்ளது. இந்த விருது, 'அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இன்டர்வென்ஷனல் பெயின் பிசிஷியன்ஸ் (ASIPP)'-இன் தலைவர் டாக்டர் லக்ஷ்மய்யாவால் 2017 ஆகஸ்ட்டில் தரப்பட்டது.  இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் உள்ள சிறந்த வலி நிவாரண மருத்துவர்களுக்கு வருடந்தோறும் அளிக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கார்த்திக் நடராஜன், World Institute of Pain-இன் இந்தியக் கிளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலி நிவாரண மருத்துவத்தையே முழு நேர தொழிலாகக் கொண்டவர். வலி நிவாரணம் என்பது மருத்துவத்தின் புதிய கிளையாகும். முதுகு வலி, மூட்டு வலி, விலா நழுவல்,  முழங்கால் கீல்வாதம் போன்ற பல நோய்களில் இருந்து இம்மருத்துவத்தினால் குணம் அடையலாம். மருந்துகளோ, பிசியோதெர...
சீர்குலைவில் இருந்து தொடக்கம்

சீர்குலைவில் இருந்து தொடக்கம்

தொழில்நுட்பம்
இசாகா (ISACA) – உலகளாவிய தொழில் வல்லுநர்களுக்கு, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற, உலக தர அறிவையும், நெட்வொர்க்கிங்கையும், தொழில் வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தி உதவுகிறது. 1969இல் நிறுவப்பட்ட இசாகா, 180 நாடுகளில் 1,40,000 தொழில் வல்லுநர்களைக் கொண்ட லாப நோக்கற்ற இயக்கம். இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சைபர் செக்யூரிட்டி நெக்சஸ் (CSX), நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் வடிவமைப்பைக் கொண்ட கோபிட்டை (COBIT) முதலியவற்றையும் அளிக்கிறது இசாகா. இந்தியாவிலேயே சென்னையில் தான் முதன் முதலில் இசாகா தொடங்கப்பட்டது. சிறந்த தொழிற்முறை லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது சென்னை இசாகா. சொந்தமாக வளாகமும், சுமார் 1000 நபர்களையும் கொண்ட இசாகா கிளைகளில், சென்னை முதன்மை இடம் வகிக்கிறது. பல்வேறு வகையான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் சென்னை இசாகா, அதன் ...
ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

அயல் சினிமா, திரைத் துளி
2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான 'தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது. ‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது! ஜேன் கோல்ட்மேனும், மேத்யூ வானும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரி, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோ...
முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

சினிமா, திரைத் துளி
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம். இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, ‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு)’ என்கிற கன்னடப் படத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமீஸ், மணிப்பூரி என பல்வேறு மொழியில், மொத்தம் 20 படங்களில் இருந்து இப்படம் தேரெந்தெடுக்கப்பட்டள்ளது. அல்சீமர்ஸ் நோயால் காணாமல் போகும் தந்தையைத் தேடுவதாக இப்படத்தின்...
ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர். “சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு பிரமிக்கத்தக்க வகையில் வளர்கிறது. தன்னையொரு லீடராக உனர்கிறது. தன் குடும்பத்தையும், தன் இனத்தையும் மிகவும் நேசிக்கும் சீசர் இரண்டையுமே அழகாகப் பேணிக் காக்கிறது” என அவருக்கு அழியாப் புகழ் தேடித் தந்த சீசர் பற்றிக் கூறுகிறார் ஆண்டி செர்கிஸ். படம் பார்த்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக பேட் ஏப் எனும் புது கதாபாத்திர...
வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீசர், தனது தலைமைக் குணத்தால் மனிதக் குரங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கவர்ந்த ஒப்பற்ற தலைவர். மனிதர்களின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கிறார் சீசர். அதற்கு முன்பே கலோனலால் அவரது மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். சினம் கொள்ளும் சீசர், தன் இனத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, கலோனலைக் கொன்று பழி வாங்கப் புறப்படுகிறார். சீசர் கலோனலைக் கண்டுபிடிக்கும் முன், கலோனல் அவரது இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து, அடிமைகள் போல் வேலை வாங்குகிறார். சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்ள, ஏப்ஸ்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இந்த அற்புதமான படத்தின் கதை. லோகன் படத்தை, சிறுமி டாஃப்னீ கீன் அழகாக்கியது போல், இப்படத்தை அமியா மில்லர் எனும் சிறுமி அற்புதமாக்கியுள்ளார். மனிதக் குரங்கு லூக்கா இறக்கும் பொழுது, அதன் காதில் பூவை வைத்து சிறுமி சிந்தும் கண்ணீர், பார்வ...
சீசரின் பிரம்மாண்டமான போர்

சீசரின் பிரம்மாண்டமான போர்

அயல் சினிமா, திரைத் துளி
விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும். ‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்கிற தலைப்பில் ரூபர்ட் வியாட்டின் இயக்கத்தில் உருவானது. அதன் தொடர் படம் தான், 2014இல் வெளியான, ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அப்படத்தை இயக்கியிருந்த மேட் ரீவ்ஸ் உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் அடுத்த பதிப்புதான், ‘வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் திரைக்கதையை அமை...
ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ். ‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது. நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. ஸ்பைடர்-மேனுக்கோ, சூப்பர் ஹீரோ ஆகவேண்டும்; அவெஞ்சர்ஸ் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்து சூப்பர் ஹீரோ ஆகி விட வேண்டுமென வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்காக, முகவரியைத் தேடித் தவிப்பவர்களுக்குக் கூட உதவுகிறா...
எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

மருத்துவம்
ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் - விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது). ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம். பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட...
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக அறிமுகமானார் டாம் ஹாலண்ட். ஜூலை 7, 2017 அன்று வெளியாகும் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ படத்தில் சோலா சூப்பர் ஹீரோவாகத் தோன்ற உள்ளார். அவரது வழிகாட்டியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேனும் படத்தில் வருகிறார். அதைப் பற்றி அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டெளனி ஜூனியர், “டோனி ஸ்பைடரை நெருக்கமாகக் கண்காணித்து, அவெஞ்சர்ஸ் ...
டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Villia...
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இ...
தி மம்மி விமர்சனம்

தி மம்மி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம். ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் நிறைவேற்றிக் கொள்ள காய்களை நகர்த்தத் தொடங்கி விடுகிறார் அஹமனெத். இளவரசியால் பீடிக்கப்படும் நிக் மார்டனின் கதியென்ன ஆனது என்றும், கடவுள் செத்துடன் இளவரசி செய்து கொண்ட ஒப்பந்தம் என்னானது என்பதும் தான் படத்தின் கதை. 1999இல், ப...