அயல் சினிமாநெப்போலியன் விமர்சனம்
நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும். இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் […]















