32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 7)
SISU விமர்சனம் அயல் சினிமா

SISU விமர்சனம்

கதையின் களம் வடக்கு ஃபின்லாந்தில் லேப்லாந்து (Lapland) எனும் பகுதியில் நிகழ்கிறது. ஒரு ஃபின்லாந்து வீரன், 30 பேர் கொண்ட நாஜிப்படையை எதிர்கொள்கிறான். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன், இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் படத்தைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், 30 நவம்பர் 1939 முதல் 13 மார்ச் 1940 வரை, ரஷ்யாவைத் தனி ஆளாக எதிர்கொண்டது ஃபின்லாந்து. மூன்று மாதங்கள் நடந்த அப்போரின் பொழுது, குளிர் மைனஸ் 43° […]

29/04/2023 Dinesh R
NFIFWI – 66 வருட சாதனையும் கொண்டாட்டமும் சமூகம்

NFIFWI – 66 வருட சாதனையும் கொண்டாட்டமும்

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) வளர்ச்சி அதிகாரிகளுடைய பிரிவின் சார்பாக NFIFWI (National Federation of Insurance Field Workers of India) – இன் 30 ஆவது கூட்டமைப்பு கவுன்சில் சந்திப்பு 2023 எனும் நிகழ்வு, இந்தியாவெங்கும் இருந்து வந்த சுமார் 4000 வளர்ச்சி அதிகாரிகள் பங்கு கொள்ள, சென்னை வர்த்தக மையத்தில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான நிகழ்வை, மாண்புமிகு […]

21/04/2023 Dinesh R
பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு அயல் சினிமா

பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு

ஒரு வசீகரமான திருடன் எட்கினும், அவனது சகாக்களும், தொலைந்து போன நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க ஒரு திருட்டை மேற்கொள்கின்றனர். நண்பரகளாக இருந்தவரின் துரோகத்தால், அந்தத் திருட்டின் பொழுது சிக்கிக் கொள்கின்றனர் எட்கினும், அவனது பலசாலியான தோழியான கோல்காவும். மேசையில் விளையாடப்படும் ‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் உள்ளரங்க விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை. பகடை உருட்டி விளையாடப்படும் விளையாட்டுகளின் அப்பாடக்கர் என ‘டன்ஜன்ஸ் & ட்ராகன்ஸ்’ விளையாட்டைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் திரைக்குக் கொண்டு வருவது […]

07/04/2023 Dinesh R
இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன் Trailer

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், […]

05/04/2023 Dinesh R
Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம் அயல் சினிமா

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை […]

31/03/2023 Dinesh R
ஜான் விக் 4 விமர்சனம் அயல் சினிமா

ஜான் விக் 4 விமர்சனம்

ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் […]

25/03/2023 Dinesh R
Shazam! Fury of the Gods விமர்சனம் அயல் சினிமா

Shazam! Fury of the Gods விமர்சனம்

டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என […]

18/03/2023 Dinesh R
65 விமர்சனம் அயல் சினிமா

65 விமர்சனம்

ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர். மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் […]

11/03/2023 Dinesh R
கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம் இது புதிது

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. […]

19/12/2022 Dinesh R
நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022 மருத்துவம்

நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022

சர்வதேச நரம்பியல் மனநலமருத்துவக் கூட்டமைப்புடன் (INA) இணைந்து புத்தி க்ளினிக் & அப்போலோ மருத்துவமனை, நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, கோவிட் காலத்திற்குப் பிறகு மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஓர் அலை போல் அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான புதியமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் உலகிற்கு எழுந்துள்ளது. இந்தக் கருத்துக்களம், மூளை மற்றும் மனதின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நரம்பியல் மருத்துவத்தையும், மனநல மருத்துவத்தையும் இருவேறு மருத்துவப் […]

16/12/2022 Dinesh R
பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி புத்தகம்

பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியை “பிளாக் ஷீப் டிவி” ஒளிபரப்பவுள்ளது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது. அரை நூற்றாண்டுக் காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீதின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து […]

14/12/2022 Dinesh R
சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன் சமூகம்

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்

சிக்னேச்சர் ஸ்டுடியோ (யுனிசெக்ஸ் சலூன் | அகாடமி) எனும் இருபாலருக்கான அழகு நிலையத்தை அண்ணா நகரில்* நிறுவியுள்ளார் ஜபீன் மெஹமூத். ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ள ஜபீன், சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கியூள்ளார். அவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்லர், சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றிருப்பதே! சிக்னேச்சர் […]

07/12/2022 Dinesh R
தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள் காணொளிகள்

தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு […]

28/11/2022 Dinesh R
தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம் அயல் சினிமா

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் […]

06/10/2022 Dinesh R