32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 8)
டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும் இது புதிது

டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும்

உலகெங்கும், செப்டம்பர் மாதம் அல்சீமர் மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்சீமர் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க, செப்டம்பர் 21-ஐ அல்சீமர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் முதியவர்களைப் பராமரிக்கும், இந்தியத்தன்மை அதிகமுள்ள தன்னிறைவு (ஆத்மநிர்பர்) பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ மாடலை வடிவமைத்துள்ளனர் புத்தி க்ளினிக் மருத்துவர்கள். அல்சைமர் நோய் டிமென்ஷியாவுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். மற்ற காரணங்களில் வாஸ்குலர் நோய், லெவி உடல்களுடன் கூடிய டிமென்ஷியா மற்றும் ஃப்ரன்டோ-டெம்போரல் டிமென்ஷியா ஆகியவை அடங்கும். மறதி நோய் என அறியப்படும் […]

22/09/2022 Dinesh R
Calcutta, I’m sorry விமர்சனம் அயல் சினிமா

Calcutta, I’m sorry விமர்சனம்

சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் […]

25/06/2022 Dinesh R
NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’ மருத்துவம்

NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’

‘நியூராலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Neurological society of India)’ என்கிற அமைப்பு, 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3200 அங்கத்தினரோடு திறம்படச் செயற்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளைதான், ‘யங் நியூரோசர்ஜன்ஸ் ஃபோரம் (Young Neurosurgeons Forum)’ ஆகும். நரம்பியல் அறுவை சிகிச்சையில் (Neurosurgery) முதுகலை பட்டம் பெற்று, பத்து வருடங்கள் பயணித்து, 45 வயதிற்குள் இருந்தால், இந்த அமைப்பில் அங்கத்தினராகச் சேர இயலும். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதிய வளர்ச்சி […]

12/06/2022 Dinesh R
உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்” மருத்துவம்

உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் – புத்தி கிளினிக்! சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்ய புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. 1. The Alchemist Zone மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், […]

02/06/2022 Dinesh R
பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம் சினிமா

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார். புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் […]

09/03/2021 Dinesh R
TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் சமூகம்

TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

TNWAA – Tamil Nadu Women Achievers Awards . பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, ‘தி பிராண்ட் ரீபப்ளிக்’ எனும் நிறுவனம் விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்நிகழ்வு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’டன் தொடங்கியது. TNWAA வின் குறிக்கோள் என்பது, ‘வாழ்த்து, ஊக்கமளி, வல்லமை கொள்ளச் செய்’ என்பதேயாகும். சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பினைத் தங்கள் துறைகளில் செய்திடும் பெண்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதன் மூலம், அதனால் மேலும் பல பெண்கள் ஊக்கம் பெற்று, தத்தம் துறைகளில் […]

08/03/2021 Dinesh R
புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை சமூகம்

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார். நிவாரணப் பொருட்கள்: […]

18/05/2020 Dinesh R
கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி மருத்துவம்

கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி

புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், புற்றுநோய் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார். “கொரோனா தொற்றுக் காலத்தில், சமூகத்தில் மருத்துவர்களான நமது பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் துறை மருத்துவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு உள்ளது. நாம், மத்திய மற்றும் மாவட்ட அரசுகள் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டு, அது படி நடக்கவேண்டியது நம் கடமையாகும். கொரோனா யொற்றுக் காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முன்னிலைப்படுத்தி இயங்க இயலாது. எனினும் நாம் நம் முக்கியத்துவத்தை உணர்ந்து, எளிதில் பாதிப்படையக் […]

25/03/2020 Dinesh R
பிளட்ஷாட் விமர்சனம் அயல் சினிமா

பிளட்ஷாட் விமர்சனம்

பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது. ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் […]

15/03/2020 Dinesh R
தி இன்விசிபிள் மேன் விமர்சனம் அயல் சினிமா

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது ‘தி இன்விசிபிள் மேன்’ எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் […]

28/02/2020 Dinesh R
கட்புலனாகாத சைக்கோ மனிதன் அயல் சினிமா

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் ‘தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்’, 1951 இல் ‘அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்’, 1984 இல் சோவியட் படமான ‘தி இன்விசிபிள் மேன்’, 2000இல் வெளிவந்த ‘ஹாலோ மேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் […]

24/02/2020 Dinesh R
நியூரோ அப்டேட் 2020 மருத்துவம்

நியூரோ அப்டேட் 2020

‘நியூரோ அப்டேட் 2020’ எனும் கருத்தரங்கத்தை மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை மருத்துவர் திரு. மொஹமெட் ரேலா தொடங்கி வைத்தார். சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் […]

15/01/2020 Dinesh R
தி க்ரட்ஜ் விமர்சனம் அயல் சினிமா

தி க்ரட்ஜ் விமர்சனம்

‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் […]

05/01/2020 Dinesh R
டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம் Trailer

டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

விக்டோரியன் காலகட்டத்தில் நடக்கும், டாக்டர் டூலிட்டிலின் பிரபலமான கதை, புதிய கதாபாத்திரங்களுடன் பெரிய திரையில் ஜனவரி 17, 2020 அன்று வெளியாகவுள்ளது. டூலிட்டில் என்னும் புனைவுக் கதைகளின் மிக உறுதியான கதாபாத்திரங்களின் ஒன்றாகவும், மிருகங்களுடன் பேசும் திறன் கொண்ட ஒரு மனிதனின் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் நடித்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் அதே தினத்தில், டூலிட்டில் திரைப்படம் இந்தியாவிலும், ஆங்க்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் […]

19/12/2019 Dinesh R