
ஏலியன்: ரோமுலஸ் | உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது வசூல்
ரிட்லி ஸ்காட்டின் உருவாக்கமான ஏலியன் பல தசாப்தங்களாகப் பயமுறுத்திப் பார்வையாளர்களைப் கவர்ந்திழுத்து வருகிறது. ஏலியன்: ரோமுலஸ், 20th செஞ்சுரி ஸ்டுடியோவின் சமீபத்திய படமாகும். இந்த அறிவியல்புனைவு திகில் தொடர் மீண்டுமொரு முறை தனது சக்தியை நிரூபித்துள்ளது. இப்படம் வெளியாவ வாரத்தின் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன் தொடக்க வார இறுதியில், ஏலியன்: ரோமுலஸ் உள்நாட்டில் $41.5 மில்லியன் வசூல் செய்து, ஏலியன் படத்தொடரில் இரண்டாவது அதிக வசூலான படமெனும் அந்தஸ்தை அடைந்துள்ளது. சர்வதேச டிக்கெட் விற்பனையில் கூடுதலாக $66.5 மில்லியனால் இந்த ஈர்க்கக்கூடிய எண்ணிக்கை மேலும் அதிகரித்து, இது உலகளாவிய வசூலை $108 மில்லியனாக உயர்த்தியுள்ளது.
படத்தின் சிக்கலான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் இதயத்தை அதிரச் செய்யும் காட்சிகள் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை...















