Shadow

Tag: Radial road Kauvery Hospital

எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital

எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital

மருத்துவம்
ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் வல்லமைக்கு சான்றாக நிற்கிறது. எக்டோபிக் யூரிட்டர் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையுடன் சரியாக இணையாமல், சிறுநீர்ப்பைக்கு வெளியே இணைந்திருக்கும் ஒரு பிறவி குறைப்பாடாக...
தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

மருத்துவம்
நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல் முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அ...
காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

இது புதிது, மருத்துவம்
பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த அக்குழந்தைக்கு, நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கியது. குழந்தையின் ஆறாவது மாதத்தில், முதுகுத்தண்டில் காசநோய் பாதித்தது.அக்குழந்தையை வங்காளதேசத்தில் இருந்து, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குநரும், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரும், அவரத...
காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

இது புதிது, மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு, மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் காது மூக...
KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது. பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்தின...
ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

இது புதிது
முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இயக்கக் கோளாறுகளை அறுவைச்சிகிச்சை மூலம் நிர்வகிப்பதற்கான களத்தை அமைத்துத் தரும். ஐம்பத்தைந்து வயதான திரு. எம்.ஏ., பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, தனது நாட்டில் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவரது அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்து, அவரது நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால், அவரது நரம்பியல் நிபுணர் அவரை மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரிடம் பரிந்துரைத்தார். பரிந்துரையைத் தொடர்ந்து, நோயாளி ரேடியல் சாலையிலுள...
காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

மருத்துவம்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார் P...