Shadow

Tag: Ridley Scott

கிளாடியேட்டர் II விமர்சனம்

கிளாடியேட்டர் II விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் கவிதையைச் சொல்லி, அவரைப் போலவே களத்தில் வாளைச் சொருகி, மண்ணை எடுத்து கைகளில் தடவிக் கொள்ளும் ஹேனோ தான், தனக்கும் மேக்ஸிமஸ்க்கும் பிறந்த மகன் லூசியஸ் வெரஸ் அரிலியஸ் என லூசிலாவிற்குத் தெரிந்து விடுகிறது. அதன் பின் ஏற்படும், தாய் – மகன் பாசப்ப...
ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர். விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் உருவாவதற்குக் காரணமானவர் ரோமுலஸ் என்பதால்தான், அவரது பெயரையே அந்நகரத்துக்குச் சூட்டியுள்ளனர். Romulus-இன் ஹாலிவுட் உச்சரிப்பு, ராம்யுலஸாக உள்ளதால், ராம்யுலஸ் என்றே தமிழ்த்தலைப்பு வருகிறது. கருவிகளைச் சேகரிக்கும் முயற்சியில், முகமணைப்பான்கள் (Facehuggers) என...
நெப்போலியன் விமர்சனம்

நெப்போலியன் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும். இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் கவிஞரான பைரான் பிரபு, நெப்போலியனை ஒரு ரொமான்ட்டிக் நாயகனாகவும், தனிமையில் சிக்கிய, இடருக்கு உள்ளான குறைப்பாடுள்ள மேதைமையாகப் பார்த்தார். கிட்டத்தட்ட ரிட்லி ஸ்காட்டின் இப்படமும் அதையே பிரதிபலிக்கிறது. போர்க்களத்தில் இருந்து, அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகப் பிரபலம். போர்க்களத்தில், ...
பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்

பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை 2049இல் நடக்கிறது. 1982இல் வந்த இப்படத்தின் முதல் பாகமான 'பிளேட் ரன்னர்' 2019 இல் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி தான் என்றாலும், சுருக்கமாக முன் கதை போல் ரெப்ளிகன்ட்ஸ் என்றால் யார், பிளேட் ரன்னர்களின் வேலையென்ன என்று படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துக்களாகப் போட்டு விடுவது சிறப்பு. அதனால் முதல் பாகம் பார்க்கவில்லையென்றாலும் கதை நன்றாக புரியத் தொடங்கிவிடும். ரெப்ளிகன்ட்ஸ் என்றால் மனிதர்களின் வேலைக்காரர்கள் எனக் கொள்ளலாம். மனிதர்களை விட வலிமையான ரெப்ளிகன்ட்ஸின் உடல், ரத்தம் சதை எலும்புகளால் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும். 2019 இல், அதாவது முதல் பாகத்தில் வரும் ரெப்ளிகன்ட் எல்லாம் நெக்சஸ்-6 வகையைச் சார்ந்தது. அதன் வாழ்நாட்களே மொத்தம் நான்கு வருடங்கள்தான். அதற்கு மேல் உயிர் வாழவிட்டால், அவர்களின் உணர்ச்சிகள் விழித்தெழுந்து விட்டால் மனிதர்களின் இருத்தல...