Shadow

Tag: Spider-Man: Across the Spider-verse

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதி...
“சொதப்பிடாத கரணு!” – ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மிரட்டப்பட்ட நடிகர்

“சொதப்பிடாத கரணு!” – ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மிரட்டப்பட்ட நடிகர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஒன்பது இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படம். இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர் பிரபாகருக்கு, நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றும் இந்திய-அமெரிக்க நடிகரான கரண் சோனி குரல் கொடுத்துள்ளார். மார்வெல் என்டர்டெயின்மென்ட் படங்களான டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) ஆகியவற்றில் டோபிண்டர் எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார். அத்தொடரின் அடுத்த பாகமான டெட்பூல் 3 (2024) படத்திலும் டோபிண்டர் பாத்திரத்தில் கரண் சோனி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது. பவித்ர் பிரபாகருக்குக் குரல் கொடுத்த அனுபவத்தினைப் பகிர்ந்த கரண் சோனி, “ஒன்பது இந்திய மொழிகளில் ஸ்பைடர்-மேன் படம் டப் செய்யப்பட்டுள்ளது என்பது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஸ்பைடர்-மேன் மீதான இந்தியர்களின் காதலை நன்கு அறிவேன். இந்திய ஸ்பைடர் மேனுக்கு நான் குரல் தருகிறேன...
பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில். ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் மேன்: இந்தியா காமிக் புத்தக’த்தில் ஜனவரி 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்திய ஸ்பைடர் மேன் முதல் முறையாகப் பெரிய திரையில் தோன்றுகிறார். மல்டிவெர்ஸில், பவித்ர் பிரபாகர் மற்ற ஸ்பைடர் மேன்களில் இருந்து எப்படி வித்தியாசமானவர் என்பதைத் தெளிவுப்படுத்தினார் இயக்குநர் கெம்ப் பவர்ஸ். அவர், “பவித்ரின் சக்திகள் மந்திரத்...
இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தி...