Shadow

Tag: Tamil thiraivimarsanam

The GOAT விமர்சனம்

The GOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
The Greatest Of All the Time - எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 'இனி நடிக்கப் போவதில்லை' என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை. இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மாஸ்...
கொட்டுக்காளி விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான அவர்களது பயணமே இப்படம். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வினோத்ராஜின் படத்தில் ஒருநாள் நிகழும் சம்பவங்கள்தான் திரைக்கதையாக்கப்படுகிறது. அவரது முதற்படத்தைப் போலவே, இப்படமும் ஒரு பயணத்தை மையப...
வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
சாலா விமர்சனம்

சாலா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. தங்கதுரையாக சார்லஸ் வினோத் நடித்துள்ளார். வில்லனாக அவர் தோளை உயர்த்தி நிமிரும் கணங்களில் எல்லாம் சாலாவால் மூக்கு உடைப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிய சாலா, தாஸ் என இரண்டு சிறுவர்களை எடுத்து வளர்க்கிறார் குணா. குணாவாக அருள்தாஸ் நடித்துள்ளார். அவரது ஆகிருதிக்குக் கொடுக்கப்படும் வழக்கமான பாத்திரத்தை நி...
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு. கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், மி...
வேதா விமர்சனம்

வேதா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?" - கல்லூரி மாணவி வேதா. "அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு" - வேதாவின் அக்கா. "அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?" ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். அதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர். வேதாவின் அண்ணன் மேல் சாதிப்பெண்ணைக் காதலித்து விட, பிரச்சனை பெரியய்யாவிடம் போகிறது. அசிங்கப்படுத்தி மிரட்டி அனுப்புகிறார், வேதாவின் அண்ணனோ காதலியுடன் வெளியேறிவிடுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறேன் என வரவழைத்து, வேதாவின் அக்காவை,...
தங்கலான் விமர்சனம்

தங்கலான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. 'மாய எதார்த்தம் (Magical Realism)' வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா. அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். நாயகனோ நிலத்திற்கு ஆசைப்படுகிறான். தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலைய...
ரகு தாத்தா விமர்சனம்

ரகு தாத்தா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா இல்லையா என்பதே கதை. நல்ல பகடியான தலைப்பு. 'இன்று போய் நாளை வா (1981)' எனும் இயக்குநர் கே. பாக்யராஜின் படத்தில் வரும் ஒரு வசனத்தைத் தலைப்பாக உபயோகித்துள்ளனர். விருப்பமின்றி ஹிந்தி கற்கும் ஒருவரின் மனோநிலையைச் சுட்டுவதற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தியுள்ளனர். ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பத...
கவுண்டம்பாளையம் விமர்சனம்

கவுண்டம்பாளையம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'குழந்தை' ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், 'வா பிசையலாம்' எனச் சொன்னால், அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அறிவு முதிர்ச்சியுள்ளவர்கள் குணமாகப் பொறுமை காத்தால்தான், அடுத்த காட்சியில் அது பரோட்டா மாவு பிசைவதைப் பற்றிய வசனம் எனத் தெரிய வரும். 'ங்ண்ணா, பச்சு மண்ணு என்னைப் போய் சந்தேகப்பட்டுப் போட்டீங்களே!' என அவரது வெள்ளந்தித்தனத...
அந்தகன் விமர்சனம்

அந்தகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை. ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம்த...
மின்மினி விமர்சனம்

மின்மினி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள். பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் தெரிய வருகிறது. சபரியை அதிலிருந்து பிரவீனா மீட்க நினைக்கும் பொழுது, சபரி காணாமல் போய்விடுகிறான். சபரியின் ஒளியை அவனுக்கு பிரவீனாவால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் கதை. பதின் பருவத்து நடிகர்கள், வளர்ந்து வாலிப பருவம் எய்துவதற்காக எட்டு வருடம் காத்திருந்து இப்படத்தை முடித்துள்ளார் இய...
நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர விரும்பும் இளையராஜா ரசிகரான வெங்கட் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகரான ஆனந்தினை சந்திக்கிறார். ஆனந்த் தன் வாழ்க்கையைக் குறித்தும், நண்பர்களைக் குறித்தும் வெங்கட் பிரபுவிடம் பகிர்வதுதான் படத்தின் கதை. சின்னச் சின்ன ஆசை, குட்டிச்சுவர் ஏறி, கல்லூரிச் சாலை, தனிமை தனிமையோ, Take it ஊர்வசி, வான் இங்கே நீலம் அங்கே, எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த பாடலின் வரிகளை அத்தியாயங்களுக்கான உப தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். IV Trip - ஏலகிரி என நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு மட்டுமே இதில் விதிவிலக்கு. தலைப்பில் தான் தமிழ்த் திரைத்துறை சென்ட்டிமென்ட் பார்த்து ஒற்று தவிர்ப்பார்கள். இப்படத்தில் உப தலைப்புகளிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனந்த், ஆனந்தம் காலனியில் குடியேறி நண்பர்களைச் சம்பாதித்து மகிழ்ச்சியாகக் கல்லூரியை முடித்துவிடுகிறான். அதுவரை கலகல...
பேச்சி விமர்சனம்

பேச்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் இருந்து விலகி, ஒரு சீரியஸான அமானுஷ்ய படத்திற்கு உத்திரவாதம் அளிக்க முயன்று உள்ளது. பேச்சி என்ற சூனியக்காரியை, ஓர் அச்சுறுத்தும் பொம்மையில் ஆவாஹனம் செய்து, அப்பொம்மையை மரத்தில் ஆணியாலடித்து விடுகின்றனர். கொல்லி மலையின் அர...
வாஸ்கோடகாமா விமர்சனம்

வாஸ்கோடகாமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக...
BOAT விமர்சனம்

BOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா...