32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஐபிசி 376

Dinesh R சேலம் Published: 08/03/2019 1 நிமிட வாசிப்பு Updated: 09/03/2019 சினிமா
எழுத்து அளவு:

IPC-376-Nanditha

ஐபிசி 376 – ஒரு த்ரில்லர் படம். வன்புணர்விற்கான தண்டனையைப் பற்றிக் குறிக்கும் சட்டப்பிரிவு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், நகைச்சுவை எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார். படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. பெண்களை இழிவுப்படுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.

த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார். தகராறு, அண்ணாதுரை படங்களின் ஒளிப்பதிவாளர் K. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் படத்தொகுப்பாளர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளரான S. பிரபாகர் ஒரு பிரபல விநியோகஸ்தர் ஆவார். ’96, ஜுங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல திரையரங்குகளை நடத்தி வருகிறார். இயக்குநர் சொன்ன கதையை நம்பித் தயாரிப்பாளராக க்களமிறங்குகிறார். அவர் முதல்முறையாகத் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கும் இருமொழிப் படம் இது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.