32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4071 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 10)
அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம் சினிமா

அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வரும் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சந்தோஷ் ராவணன், ”இந்தத் திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனைப் படித்து, இரண்டு நாட்களில், ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு […]

03/06/2026 Dinesh R
PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு அயல் சினிமா

PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு

மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்-ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டுப் பின்னணியுடன் ஆக்‌ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, “சேது, வாரணம் […]

03/06/2026 Dinesh R
“He-Man: மனித நேயம் மிக்க சூப்பர் ஹீரோ” – பாடகர் கார்த்திக் அயல் சினிமா

“He-Man: மனித நேயம் மிக்க சூப்பர் ஹீரோ” – பாடகர் கார்த்திக்

‘ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்’ திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்குக் கார்த்திக் பின்னணி குரல் கொடுத்துள்ளார். முதலில், உலகளவில் ஆங்கிலத்தில் வெளியான இப்படம், இந்தியாவில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவை அடங்கும். தமிழ்ப் பதிப்பில் பாடகர் கார்த்திக் ஹீ-மேனுக்குக் குரல் கொடுத்துள்ளார். அவருடன் ஆதித்யா மேனன் ஸ்கெலட்டோராகவும், […]

02/06/2026 Dinesh R
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review அயல் சினிமா

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், ‘தி ஹன்டர்’ என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் […]

29/05/2026 Dinesh R
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review இது புதிது

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் […]

28/05/2026 Dinesh R
He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள் அயல் சினிமா

He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள்

‘ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்’ திரைப்படம், இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5, 2026 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆங்கில ட்ரெய்லர், தீவிர ‘ஹீ-மேன்’ ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ‘எட்டர்னியா (Eternia)’ உலகின் மீதான ஒரு விறுவிறுப்பான முன்னோட்டத்தையும் ரசிகர்களுக்கு வழங்கியது; அதே வேளையில், சமீபத்தில் வெளியான தமிழ் ட்ரெய்லரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைச் சுற்றியுள்ள […]

26/05/2026 Dinesh R
BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இது புதிது

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ”இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை […]

19/05/2026 Dinesh R
“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன் இது புதிது

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் […]

16/05/2026 Dinesh R
சட்டென்று மாறுது வானிலை விமர்சனம் சினிமா

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு. மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் […]

16/05/2026 Dinesh R
கருப்பு விமர்சனம் | Karuppu review இது புதிது

கருப்பு விமர்சனம் | Karuppu review

நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும். பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து […]

15/05/2026 Dinesh R
EXAM விமர்சனம் | Amazon Prime Video OTT

EXAM விமர்சனம் | Amazon Prime Video

அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் – காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் […]

14/05/2026 Dinesh R
இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana OTT

இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

‘வடசென்னை 2’ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில், தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் […]

13/05/2026 Dinesh R
சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர் சினிமா

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

BV ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் – மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 […]

12/05/2026 Dinesh R
ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori சமூகம்

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அருந்ததி டெப், மெல்லிசை ட்யூன்களின் கருத்தாக்கத்திற்கும் இசையமைப்பிற்கும் மூளையாக இருந்து இந்நிகழ்ச்சியை இயக்கினார். […]

10/05/2026 Dinesh R